பத்திரப்பதிவுத் துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

12:26 AM (IST) Jul 09
சமீபத்தில் நடைபெற்ற அரசின் முத்திரைத் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் இந்த திட்டம் அமையவுள்ள இடங்கள் தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு முதல்வர் அறிவுறுத்தினார்.
12:01 AM (IST) Jul 09
கேரளா சென்ற மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
11:30 PM (IST) Jul 08
தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
11:07 PM (IST) Jul 08
ஜனநாயகத்தை இறக்க விடமாட்டோம் என்று மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல் வன்முறை குறித்து ஜே.பி நட்டா கூறியுள்ளார்.
10:46 PM (IST) Jul 08
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்பப் படிவத்தை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.
09:32 PM (IST) Jul 08
பத்திரப்பதிவுத் துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
08:48 PM (IST) Jul 08
ஆதார் மற்றும் பான் கார்டுகளை இணக்காத நபர்கள் குறிப்பிட்ட 15 பணப்பரிவர்த்தனகளை மேற்கொள்ள முடியாது. அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.
08:13 PM (IST) Jul 08
தபால் அலுவலக திட்டம் மூலம் ஒரு நாளைக்கு ரூ.133 முதலீடு செய்து 3 லட்சம் பெறுவது எப்படி என்று பார்க்கலாம்.
06:35 PM (IST) Jul 08
நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருந்த நிலையில், நடிகர் விஜய்க்கு அறிவுரை கூறியுள்ளார்.
06:01 PM (IST) Jul 08
டெல்லியில் கனமழை பெய்து வருவதால், தலைநகரின் பல பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், டெல்லிக்கு வானிலை மையம் மஞ்சள் அலெர்ட் விடுத்துள்ளது.
05:27 PM (IST) Jul 08
இஸ்லாமிய நாடுகள் தனிப்பட்ட சட்டங்களை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்கிறது. இந்தியாவில் மட்டும் அதுபற்றி பேச்சுக்கள் வரும்போது ஏன் கூச்சல் ஏற்படுகிறது.
03:25 PM (IST) Jul 08
டெல்லியில் அடுத்த 24 மணி நேரத்தில் 115.6 முதல் 204.0 மி மீட்டர் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
02:00 PM (IST) Jul 08
மாமன்னன் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
01:53 PM (IST) Jul 08
குடும்ப அரசியல் செய்யும் அனைத்து கட்சிகளின் பிரதான நோக்கம் ஊழல் மட்டுமே. குடும்ப அரசியல் செய்யும் காங்கிரஸ் கட்சியின் ஊழல் உலகமறிந்தது என தெலங்கானா மாநிலத்தை ஆட்சி செய்யும் சந்திரசேகர ராவ்-ன் குடும்ப அரசியலும், ஊழலும், உச்சத்தை அடைந்துள்ளது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
12:46 PM (IST) Jul 08
எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வரும் நடிகை மோனிஷா, கின்னஸ் சாதனை படைத்துள்ளதை அறிந்த ரசிகர்கள் அவரை வியந்து பாராட்டி வருகின்றனர்.
11:59 AM (IST) Jul 08
திமுக ஆட்சியில் வேளாண்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. வேளாண் திட்டங்களுக்காக பல்வேறு திட்டங்கள் முனைப்புடன் செயல்படுத்தப்படுகின்றன. திமுக அரசின் நடவடிக்கையால் மண்ணும், மக்களும் செழித்துள்ளனர் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
11:42 AM (IST) Jul 08
தெலுங்கானாவில் இருக்கும் வாரங்கல் பத்ரகாளி அம்மன் கோவிலில் பிரதமர் மோடி இன்று தரிசனம் செய்தார்.
11:39 AM (IST) Jul 08
விடாமுயற்சி படத்திற்காக தயாராகி வரும் நடிகர் அஜித், தற்போது உடல் எடையை சட்டென குறைத்து ஸ்லிம் லுக்கிற்கு மாறி இருக்கிறார்.
11:19 AM (IST) Jul 08
17 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.
11:18 AM (IST) Jul 08
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
11:17 AM (IST) Jul 08
கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் முகநூலில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
10:23 AM (IST) Jul 08
மடோன் அஸ்வின் இயக்கியுள்ள மாவீரன் படத்தில் ஹீரோவாக நடித்துள்ள சிவகார்த்திகேயன், அப்படத்திற்காக மிகவும் கம்மியான சம்பளம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
08:37 AM (IST) Jul 08
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் பாடலை கேட்டு அவரது ரசிகர் ஒருவர் தற்கொலை முடிவை கைவிட்ட சம்பவம் அறிந்த ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
07:42 AM (IST) Jul 08
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், தன்னுடைய மகனின் ஒரிஜினல் பெயர் நீலகண்டன் என தெரிவித்துள்ளார்.
07:20 AM (IST) Jul 08
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், வியாசரபாடி, பொன்னேரி உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.