உடல் எடையை குறைத்து.. துரும்பாய் இளைத்துப்போன அஜித் - லேட்டஸ்ட் போட்டோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்
விடாமுயற்சி படத்திற்காக தயாராகி வரும் நடிகர் அஜித், தற்போது உடல் எடையை சட்டென குறைத்து ஸ்லிம் லுக்கிற்கு மாறி இருக்கிறார்.
நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக வெளிவந்த துணிவு திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. எச்.வினோத் இயக்கிய இப்படம் வங்கியில் நடக்கும் தில்லுமுல்லு வேலைகளை வெளிச்சம் போட்டு காட்டியது. இப்படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கேன், வீரா, அமீர், பாவனி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. கடந்த ஜனவரி மாதம் பொங்கலுக்கு திரைக்கு வந்த இப்படம் வசூலை வாரிக்குவித்தது.
துணிவு படத்தின் வெற்றிக்கு பின்னர் பைக்கை எடுத்துக்கொண்டு உலக சுற்றுலா கிளம்பிய அஜித், தன்னுடைய நண்பர்களுடன் நேபாள், பூட்டான் உள்ளிட்ட நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதையடுத்து மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக உள்ள விடாமுயற்சி படத்திற்காக ரெடியாக கிளம்பிய அஜித், தற்போது வெளிநாட்டில் தங்கி, உடல் எடையை குறைக்கும் பணியில் இறங்கி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... ஹாலிவுட் ரேஞ்சுக்கு ஆக்ஷன் காட்சிகள்... அருண் விஜய் நடித்த மிஷன் படத்தின் மிரட்டலான மேக்கிங் வீடியோ இதோ
Ajith Latest photo
அதன்படி தற்போது சுவிட்சர்லாந்து நாட்டில் இருக்கும் அஜித், அங்கு பனிப்பிரதேசத்தை சுற்றிப்பார்க்க சென்ற போது ரசிகர் ஒருவருடன் போட்டோ எடுத்துள்ளார். அந்த போட்டோ தற்போது இணையத்தில் வெளியாகி படு வைரல் ஆகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அஜித் மிகவும் மெலிந்த தோற்றத்தில் இருப்பதை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், அதனை அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.
Ajith Latest photo
விடா முயற்சி படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கடைசியாக அசல் படத்தில் டபுள் ரோலில் நடித்திருந்த அஜித், அதன்பின் 13 ஆண்டுகளுக்கு பின் தற்போது தான் இரட்டை வேடம் ஏற்று நடிக்க உள்ளாராம். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க உள்ளது. இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தினை லைகா நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... மாவீரன் படத்துக்காக கம்மி சம்பளம் வாங்கிய சிவகார்த்திகேயன்... என்ன காரணம் தெரியுமா?