MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மாவீரன் படத்துக்காக கம்மி சம்பளம் வாங்கிய சிவகார்த்திகேயன்... என்ன காரணம் தெரியுமா?

மாவீரன் படத்துக்காக கம்மி சம்பளம் வாங்கிய சிவகார்த்திகேயன்... என்ன காரணம் தெரியுமா?

மடோன் அஸ்வின் இயக்கியுள்ள மாவீரன் படத்தில் ஹீரோவாக நடித்துள்ள சிவகார்த்திகேயன், அப்படத்திற்காக மிகவும் கம்மியான சம்பளம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

1 Min read
Author : Ganesh A
Published : Jul 08 2023, 10:21 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Maaveeran

Maaveeran

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்து தற்போது தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இணைந்துவிட்டார். ரஜினி, விஜய், அஜித்துக்கு அடுத்தபடியாக இவரது படங்களுக்கு மிகப்பெரிய அளவில் பிசினஸ் உள்ளதால், ரிலீசுக்கு முன்பே இவர் நடிக்கும் படங்கள் பெரும் தொகைக்கு விற்கப்பட்டு வருகின்றன.

24
Maaveeran

Maaveeran

அந்த வகையில் அவர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் மாவீரன் திரைப்படமும் ரிலீசுக்கு முன்பே ரூ.80 கோடி வரை வசூல் ஈட்டி உள்ளது. இப்படத்தை மடோன் அஸ்வின் இயக்கி உள்ளார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை 14-ந் தேதி திரைக்கு வர உள்ளது. தற்போது அப்படத்திற்கான புரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதையும் படியுங்கள்... திடீரென ஆன்மீக சுற்றுலா சென்ற சாய் பல்லவி... பாத யாத்திரை சென்றபோது ரசிகர்களுடன் எடுத்த போட்டோஸ் இதோ

34
Maaveeran

Maaveeran

மாவீரன் படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் ரிலீஸ் ஆக உள்ளதால், அங்கும் இப்படத்தை புரமோட் செய்ய தயாராகி வருகிறார் சிவகார்த்திகேயன். அதன்படி இன்று ஐதராபாத்திலும், நாளை கேரளா மற்றும் பெங்களூருவிலும் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அடுத்தபடியா வருகிற ஜூலை 10-ந் தேதி சென்னையில் இப்படத்தின் பிரஸ்மீட் நடைபெற இருக்கிறது.

44
Maaveeran

Maaveeran

இந்நிலையில், மாவீரன் படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்காக அவர் ரூ.25 கோடி சம்பளமாக வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அவர் இதற்கு முன் நடித்த பிரின்ஸ் படத்திற்காக ரூ.30 கோடி சம்பளமாக வாங்கி இருந்தார். அப்படம் படுதோல்வி அடைந்ததன் காரணமாக மாவீரன் படத்துக்காக அவர் ரூ.5 கோடி சம்பளத்தை குறைத்துக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்... ஜஸ்ட் மிஸ்... தற்கொலை செய்யப்போன ரசிகரை கடவுள் போல் வந்து காப்பாற்றிய ஏ.ஆர்.ரகுமான்- கண்கலங்க வைக்கும் சம்பவம்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிவகார்த்திகேயன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ராஷ்மிகாவை விட விஜய் தேவரகொண்டா இத்தனை வயசு மூத்தவரா? வெளிவந்த வயது வித்தியாசம்
Recommended image2
தாய் கிழவி முதல் தடயம் வரை... பிப்ரவரி 27ல் தியேட்டர் & OTT-ல் புது ரிலீஸ் என்னென்ன?
Recommended image3
நான் யாரையும் காலி பண்ண வரல; எனக்கு சிலர் தடை போடுறாங்க..! புயலை கிளப்பிய சிவகார்த்திகேயன் ஸ்பீச்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved