- Home
- Cinema
- திடீரென ஆன்மீக சுற்றுலா சென்ற சாய் பல்லவி... பாத யாத்திரை சென்றபோது ரசிகர்களுடன் எடுத்த போட்டோஸ் இதோ
திடீரென ஆன்மீக சுற்றுலா சென்ற சாய் பல்லவி... பாத யாத்திரை சென்றபோது ரசிகர்களுடன் எடுத்த போட்டோஸ் இதோ
எஸ்.கே.21 படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வரும் நடிகை சாய் பல்லவி, திடீரென ஆன்மீக சுற்றுலா சென்றபோது எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

sai pallavi
பிரேமம் என்கிற மலையாள படம் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தவர் தான் சாய் பல்லவி. அப்படத்தில் அவர் நடித்த மலர் டீச்சர் கதாபாத்திரம் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது. அந்த அளவுக்கு எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருந்தார் சாய் பல்லவி. இதையடுத்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
sai pallavi
தற்போது நடிகை சாய் பல்லவி, தமிழில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் எஸ்.கே.21 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் சாய் பல்லவி. இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் சிவகார்த்திகேயன் இராணுவ வீரராக நடித்து வருகிறார். இதற்காக பிரத்யேக பயிற்சி எடுத்து அவர் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... ஹாலிவுட் படமான 'மிசன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங்' வெளியாகும் திரையரங்குகளில் 'ஜவான்' ட்ரைலர் வெளியாகிறது!
sai pallavi
எஸ்.கே.21 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. அதில் நடிகை சாய் பல்லவியும் கலந்துகொண்டு நடித்து வந்தார். தற்போது சிவகார்த்திகேயன் தன்னுடைய மாவீரன் பட ரிலீஸ் பணிகளில் பிசியாக இருப்பதனால் தற்போது எஸ்.கே.21 படத்திற்கு பிரேக் விடப்பட்டு உள்ளது. இந்த ஓய்வு நேரத்தில் நடிகை சாய் பல்லவி ஆன்மீக சுற்றுலா சென்றிருக்கிறார். அதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
sai pallavi
அந்த வகையில், அவர் காஷ்மீரில் உள்ள அமர்நாத் கோவிலுக்கு பாத யாத்திரையாக சென்று அங்குள்ள பனி லிங்கத்தை வழிபட்டு இருக்கிறார். அப்போது அங்கு வந்திருந்த ரசிகர்களுடன் நடிகை சாய் பல்லவி செல்பியும் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மாவீரன் பட ரிலீசுக்கு பின்னர் எஸ்.கே.21 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் காஷ்மீரில் தொடங்கும் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... ஜஸ்ட் மிஸ்... தற்கொலை செய்யப்போன ரசிகரை கடவுள் போல் வந்து காப்பாற்றிய ஏ.ஆர்.ரகுமான்- கண்கலங்க வைக்கும் சம்பவம்