WB Polls : கலவர பூமியான மேற்கு வங்கம்.. ஜனநாயகத்தை இறக்க விடமாட்டோம்.. களத்தில் குதித்த ஜே.பி நட்டா
ஜனநாயகத்தை இறக்க விடமாட்டோம் என்று மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல் வன்முறை குறித்து ஜே.பி நட்டா கூறியுள்ளார்.

மேற்கு வங்கம் முழுவதும் பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்குப்பதிவின் போது வன்முறை நடந்ததாக செய்திகள் வெளியான நிலையில், பாஜக தலைவர் ஜே.பி நட்டா, பஞ்சாயத்து தேர்தல் வன்முறை குறித்து மாநில எதிர்க்கட்சித் தலைவர் (லோபி) சுவேந்து அதிகாரி மற்றும் பாஜக மேற்கு வங்க பொறுப்பாளர் மங்கள் பாண்டே ஆகியோரிடம் சனிக்கிழமை பேசி உறுதியளித்தார்.
மேற்கு வங்கத்தில் ஜனநாயகத்தை அழிய விடாது பாஜக என்றும், வன்முறைக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நடத்தும் போராட்டம் ஜனநாயக வழியில் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்றும் கூறினார். "ஜனநாயகத்தின் இந்த மரணத்தை பாஜக அனுமதிக்காது. ஜனநாயக வழியில் இந்த போராட்டத்தை தீர்க்கமான நிலைக்கு கொண்டு செல்வோம்" என்று பாஜக தலைவர் ஜே.பி நட்டா கூறினார்.
இதற்கிடையில், நேற்று காலை, கொல்கத்தாவில் உள்ள மாநில தேர்தல் கமிஷன் அலுவலகம் முன்பு மாநில பாஜக தொண்டர்கள் மாநிலத்தில் தேர்தல் தொடர்பான வன்முறைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேற்கு வங்கத்தில் பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் தொடர்பான வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன, ஆளும் திரிணாமுல் காங்கிரஸும் பாரதிய ஜனதாவும் தங்கள் கட்சித் தொண்டர்களைக் கொன்றதாக ஒருவரையொருவர் குற்றம் சாட்டினர்.
ஆதார் - பான் கார்டு இணைக்கவில்லையா.? இனி இந்த 15 விஷயங்களை செய்ய முடியாது - முழு விபரம்
மாநிலத்தில் உள்ள பல வாக்குச் சாவடிகளில் வாக்குப்பெட்டி மற்றும் வாக்குச் சீட்டு கொள்ளை மற்றும் அழிக்கப்பட்ட சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன. முன்னதாக, மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, மேற்கு வங்கத்தில் மூன்றடுக்கு பஞ்சாயத்துத் தேர்தலின் போது திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) வன்முறையில் ஈடுபட்டதாகத் தாக்கி, மாநிலம் எரிகிறது என்றும், 355 அல்லது பிரிவு 356 இல் மத்திய அரசு தலையிட வேண்டும் என்றும் கூறினார்.
20,000-க்கும் மேற்பட்ட சாவடிகள் காவல்துறை முன்னிலையில் ஆளுங்கட்சியின் குண்டர்களால் கைப்பற்றப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார். "மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் உயிர்களைக் காப்பாற்றவும், அமைதியை மீட்டெடுக்கவும் தன்னால் இயன்றவரை முயற்சி செய்கிறார். ஆனால், மாநிலத்தில் தேர்தல் தொடர்பான வன்முறைகள் தொடர்ந்ததால் அவரது வேண்டுகோள் வீணாகிவிட்டது.
15க்கும் மேற்பட்டோர் குண்டர்களால் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். மாநில காவல்துறை முன்னிலையில் 20,000 க்கும் மேற்பட்ட பூத்கள் திரிணாமுல் குண்டர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன என்று அடுக்கடுக்காக குற்றஞ்சாட்டினார். மேற்கு வங்காளத்தில் 3,341-கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. மேலும் கிராம பஞ்சாயத்து தேர்தல் மையங்களின் எண்ணிக்கை 58,594 ஆகும். கிராம பஞ்சாயத்து அளவில் 63,239 இடங்களும், பஞ்சாயத்து சமிதி அளவில் 9730 இடங்களும், ஜிலா பரிஷத் அளவில் 928 இடங்களும் உள்ளன.ஜூலை 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
வெறும் ரூ.133 போடுங்க.. உங்களுக்கு 3 லட்சம் கிடைக்கும் - அதிக லாபம் தரும் போஸ்ட் ஆபிஸ் திட்டம்