கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: விண்ணப்ப படிவத்தில் கேட்கப்படும் விவரங்கள் என்ன? முழு விபரம்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்பப் படிவத்தை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.
மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்துக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் என்று பெயர் சூட்டினார் தமிழக முதல்வர் ஸ்டாலின். மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளர்களின் வயது 21 பூர்த்தியடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருமானம் 2.5 லட்சத்துக்கு மேல் இருக்க கூடாது. 5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படாது.
பெண் எம்.எல்.ஏ.க்கள், எம்.பிக்கள், பெண் அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு வழங்கப்படாது. எந்த ரேஷன் கடையில் குடும்ப அட்டை உள்ளதோ அந்த கடைகளில் ரேஷன் கடைகளில் விண்ணப்பிக்க வேண்டும் என பல விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளின் விவரங்களை தேர்ந்தெடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பெறுவதற்கான விண்ணப்ப படிவம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்த விண்ணப்ப படிவத்தில் விண்ணப்பதாரரின் பெயர், திருமண நிலை, தொலைபேசி எண், மின் இணைப்பு எண், ஆதார் எண், குடும்ப அட்டை எண், வாடகை வீடா அல்லது சொந்த வீடா என்பன உள்ளிட்ட 10 கேள்விகள் இடம்பெற்றுள்ளன. மேலும் 18 வயதுக்கு மேல் உள்ள குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள், சொத்து விவரம், நில உடமை மற்றும் வாகன விவரங்கள் உள்ளிட்டவையும் விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ளன.
வெறும் ரூ.133 போடுங்க.. உங்களுக்கு 3 லட்சம் கிடைக்கும் - அதிக லாபம் தரும் போஸ்ட் ஆபிஸ் திட்டம்
ஆதார் - பான் கார்டு இணைக்கவில்லையா.? இனி இந்த 15 விஷயங்களை செய்ய முடியாது - முழு விபரம்