Power Shutdown in Chennai: சென்னையில் இந்த பகுதிகளில் இன்று பவர் கட்! எத்தனை மணிநேரம் தெரியுமா?
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், வியாசரபாடி, பொன்னேரி உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
ஐடி காரிடார்:
துரைப்பாக்கம் ஈஸ்வரன் கோயில், ராஜு நகர், டிவிஎச் அடுக்குமாடி குடியிருப்புகள், விஓசி தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
வியாசர்பாடி:
மாத்தூர் தொழில் பூங்கா, பொன் நகர், மும்தாஜ் நகர், பார்வதி புரம், அன்னை நகர், மஞ்சம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
தாம்பரம்:
ராதா நகர், சாந்தி நகர், ஸ்டேஷன் ரோடு, காமராஜர் தெரு, கட்டபொம்மன் தெரு, பாரதியார் தெரு, கலைமகள் தெரு, காந்தி நகர் முடிச்சூர், லட்சுமி நகர், பெரியார் நகர், ஸ்ரீபாலாஜி நகர், ஏஎல்எஸ் தோட்டம், ராஜராஜேஸ்வரி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
பொன்னேரி :
புதிய கும்மிடிப்பூண்டி, பாப்பான் குப்பம், சித்தராஜா கண்டிகை, எளவூர், ஆரம்பாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.