Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எந்தெந்த ஏரியாக்களில் மின்தடை தெரியுமா? கேட்டா ஷாக் ஆயிடுவீங்க.!
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், கிண்டி, போரூர், அடையாறு உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தாம்பரம்:
கோவிலம்பாக்கம் சோபா, ராஜா நகர், காகிதபுரம் ராதா நகர், புருசோத்தமன் நகர், பத்மநாபா நகர், ஸ்ரீ ராம் நகர், வடக்கு மசூதி தெரு, கடாரி அம்மன் தெரு, ராஜகேளம்பாக்கம், வேளச்சேரி மெயின் ரோடு, மகாசக்தி காலனி, விவேகானந்தர் தெரு, பஜனை கோயில் தெரு, கடப்பேரி உமையாபுரம், பிள்ளையார் கோயில் தெரு, மாடம்பாக்கம், அகரம் மெயின் ரோடு, மப்பேடு சந்திப்பு, திருவாஞ்சேரி, காஷ்பாபுரம்.
கிண்டி:
கலைமகள் நகர், பாலவிநாயகர் தெரு, மடிப்பாக்கம் சதாசிவம் நகர், கோவிந்தசாமி நகர், புழுதிவாக்கம் இந்து காலனி, பிரதீப் மருத்துவமனை, அம்மன் நகர், டி.ஜி.நகர் மேற்கு கரிகாலன் தெரு, காந்தி காலனி, பரங்கிமலை மதியாஷ் நகர், பூந்தமல்லி சாலை, ராஜ்பவன் டி.என்.எச்.பி., நேரு நகர்.
அண்ணாநகர்:
வி.ஓ.சி நகர், ஷெனாய் நகர், அமைந்தகரை, கேளம்பாக்கம் கார்டன் சாலை, திருவீதி அம்மன் கோயில் தெரு.
போரூர்:
மங்களா நகர், மவுண்ட் பூந்தமல்லி சாலை, பி.டி.நகர் பூந்தமல்லி நெடுஞ்சாலை, சென்னீர்குப்பம் குறிப்பிட்ட பகுதி, மாங்காடு ருக்மணி நகர், முத்துக்குமரன் நகர், ராஜேஸ்வரி நகர், பாரி கார்டன், மலையம்பாக்கம் காவனூர் ஆர்.இ.நகர், சிறுகளத்தூர், கத்திப்பேட்டை.
அடையாறு:
பெசன்ட் நகர், கொட்டிவாக்கம், சைதாப்பேட்டை, ஐ.ஐ.டி., திருவான்மியூர், பெருங்குடி, எழில் நகர், ஈஞ்சம்பாக்கம், வேளச்சேரி மின் துணை மின் நிலைய பகுதிகள்.
கே.கே நகர்:
பிடி ராஜன் சாலை, கோடம்பாக்கம், ராமசாமி சாலை, விருகம்பாக்கம், ஆழ்வார் திரு நகர், ஆர்.ஆர். காலனி, கே.கே. நகர் மின் துணை நிலைய பகுதிகள்.
தண்டையார்பேட்டை:
அத்திப்பட்டு புதுநகர், கே.ஆர்.பாளையம், தமிழ்குறிஞ்சியூர், கரையன்மேடு.
ஐடி காரிடார்:
கொட்டிவாக்கம், எம்.ஜி.ஆர் நகர், ஆனந்த நகர் குறிப்பிட்ட பகுதி, தாழம்பூர் சாலை, எஸ்டேட் மெயின் ரோடு, பாக்கியம் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.