மீண்டும் இணையும் மாமன்னன் கூட்டணி... வடிவேலுவை நாயகனாக வைத்து மாரி செல்வராஜ் செய்ய உள்ள அடுத்த சம்பவம்
மாமன்னன் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உதயநிதி ஸ்டாலின் கடைசிப் படமான மாமன்னன் கடந்த மாதம் ரிலீஸ் ஆனது. மாரி செல்வராஜ் இயக்கிய இப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவை சீரியஸான கேரக்டரில் நடிக்க வைத்து அதில் வெற்றியும் கண்டிருந்தார் மாரி. மாமன்ன படத்தில் உதயநிதி உடன் கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், லால் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தை ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார்.
maamannan
திரையரங்கில் வெற்றிநடைபோட்டு வரும் மாமன்னன் திரைப்படம் ஒரே வாரத்தில் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்தது. இப்படம் தற்போது வெற்றிகரமாக இரண்டாவது வாரத்திற்குள் அடியெடுத்து வைத்திருக்கிறது. இரண்டாவது வாரத்திலும் தமிழகத்தில் 470-க்கும் மேற்பட்ட திரைகளில் மாமன்னன் வெற்றிகரமாக ஓடி வருவதால் இந்த வாரமும் இப்படத்தின் வசூல் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... 100 மில்லியன் பார்வைகளை கடந்த சலார் டீசர்... சட்டென டிரைலர் அப்டேட்டை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்த படக்குழு
maamannan
இதுதவிர தமிழில் இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து தெலுங்கிலும் இப்படத்தை டப்பிங் செய்து ரிலீஸ் செய்ய உள்ளனர். அண்மையில் இதன் டிரைலரை தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு மற்றும் இயக்குனர் ராஜமவுலி ஆகியோர் ரிலீஸ் செய்தனர். இப்படம் தெலுங்கில் வருகிற ஜூலை 14-ந் தேதி திரைக்கு வர உள்ளதால் அங்கும் வசூல் சாதனை நிகழ்த்த வாய்ப்புள்ளது.
மாமன்னன் படத்தின் தாக்கமே இன்னும் ஓயாத நிலையில், அப்படத்தின் தூணாக இருந்த வடிவேலுவும், இயக்குனர் மாரி செல்வராஜும் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி 1997-ம் ஆண்டு வெளிவந்த லைஃப் இஸ் பியூட்டிபுல் என்கிற இத்தாலிய திரைப்படத்திற்காக தான் வடிவேலுவும், மாரி செல்வராஜும் மீண்டும் இணைய உள்ளார்களாம். இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளதாக பேச்சு அடிபடுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... மீண்டும் ஒரு மலையாள படம்.. அதிரடி ஆக்சனில் இறங்கும் திரிஷா - "மின்னல் முரளி" தான் படத்தின் ஹீரோ!