Asianet News TamilAsianet News Tamil

மீண்டும் ஒரு மலையாள படம்.. அதிரடி ஆக்சனில் இறங்கும் திரிஷா - "மின்னல் முரளி" தான் படத்தின் ஹீரோ!

திரிஷா நடிக்க வந்து சுமார் 19 ஆண்டுகள் கழித்து தான் அவர் மலையாள திரைப்படங்களுக்கு நடிக்கச் சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Actress Trisha Third malayalam movie directed by Akhil Paul and Anas Khan
Author
First Published Jul 8, 2023, 1:37 PM IST

சுமார் 24 ஆண்டுகளுக்கு முன்பு பிரசாந்த் நடிப்பில் வெளியான ஜோடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானவர்தான் நடிகை திரிஷா. இவர் நடித்த முதல் திரைப்படமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதன் பிறகு தமிழில் தொடர்ச்சியாக மௌனம் பேசியதே, மனசெல்லாம், சாமி, லேசா லேசா, அலை, எனக்கு 20 உனக்கு 18 என்று தரமான திரைப்படங்களை தனது நடிப்பில் கொடுக்க துவங்கினார். 90களில் பிறந்த பலருக்கு திரிஷா தான் கனவு கன்னி என்றால் அது மிகையல்ல. 

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் கடந்த 24 ஆண்டுகளாக நடித்து வரும் திரிஷா, கடந்த 2018ம் ஆண்டு வெளியான Hey Jude என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள மொழியிலும் களமிறங்கினார். அவர் நடிக்க வந்து, சுமார் 19 ஆண்டுகள் கழித்து தான் அவர் மலையாள திரைப்படங்களுக்கு நடிக்கச் சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள் : கின்னஸ் சாதனை படைத்துள்ள எதிர்நீச்சல் சீரியல் நடிகை.! 

அதன் பிறகு ஜித்து ஜோசப் இயக்கத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் வெளியான "ராம்" படத்தில் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரமே நேற்று நடித்திருந்தார். இந்நிலையில் முதல் முறையாக நாயகன் டோவினோ தாமஸுடன் ஒரு மலையாளத் திரைப்படத்தில் இணையுள்ளார் திரிஷா. 

கடந்த 2020ம் ஆண்டு டோவினோ தாமஸ் நடிப்பில் வெளியான Forensic என்ற மலையாள திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. அந்த படத்தை இயக்கிய அகில் பவுல் மற்றும் அனாஸ்கான் இயக்கத்தில் உருவாக உள்ள Identity என்ற படத்தில் தான் திரிஷா நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மடோனா செபஸ்டினும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள் : டீசர் 100 மில்லியன்.. சட்டென டிரைலர் அப்டேட்டை வெளியிட்டு சலார் படக்குழு!

Follow Us:
Download App:
  • android
  • ios