Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் 13 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. முக்கிய துறைகளில் அதிரடி மாற்றம் - முழு விபரம்

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

13 IAS officers transferred in Tamil Nadu
Author
First Published Jul 8, 2023, 11:27 PM IST | Last Updated Jul 8, 2023, 11:27 PM IST

நிர்வாக காரணங்களுக்கு தமிழக அரசுத்துறைகளில் அவ்வப்போது பணியிட மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அரசு துறை செயலாளர்கள், காவல் அதிகாரிகள் உள்பட அரசின் பல்வேறு துறைகளில் இந்த பணியிட மாற்றங்களை அவ்வப்போது தமிழக அரசு மேற்கொள்ளும். அந்த வகையில் 13 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

13 IAS officers transferred in Tamil Nadu

1.சிறப்புத் திட்ட அமலாக்கத்துறை செயலாளராக தாரேஸ் அகமது ஐ.ஏ.எஸ் நியமனம்.

2.நில சீர்திருத்தத் துறை ஆணையராக வெங்கடாச்சலம் ஐ.ஏ.எஸ் நியமனம்;

3.பொதுத்துறை கூடுதல் செயலாளராக அதிகாரி சிவஞானம் ஐ.ஏ.எஸ் நியமனம்;

4.வருவாய் நிர்வாக ஆணையராக கலையரசி  ஐ.ஏ.எஸ் நியமனம்

5.நீர்வளத்துறை கூடுதல் செயலாளராக மலர்விழி ஐ.ஏ.எஸ் நியமனம்.

6.உள்துறை சிறப்பு செயலாளராக சுகந்தி ஐ.ஏ.எஸ் நியமனம்

7.ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இயக்குநராக சந்திரகலா ஐ.ஏ.எஸ் நியமனம்

8.சமூக நலத்துறை ஆணையராக ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதவல்லி நியமனம்.

9.நகராட்சி நிர்வாக கூடுதல் செயலாளராக மகேஸ்வரி ரவிகுமார் ஐ.ஏ.எஸ் நியமனம்

10.ஊரக வளர்ச்சித் துறை சிறப்பு செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி ஜெயகாந்தன்  நியமனம்

11.பொதுத்துறை துணை செயலாளராக பத்மஜா ஐ.ஏ.எஸ் ஆகியோரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை - யார் யாருக்கெல்லாம் கிடைக்கும்? யாருக்கு கிடைக்காது? முழு விபரம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios