- Home
- Tamil Nadu News
- சென்னை
- போதையில் தாறுமாறாக ஓடிய கார்! விரட்டி சென்ற காவலர் உயிரி*ழப்பு! இளைஞரை HIT and RUN பிரிவில் தூக்கிய போலீஸ்!
போதையில் தாறுமாறாக ஓடிய கார்! விரட்டி சென்ற காவலர் உயிரி*ழப்பு! இளைஞரை HIT and RUN பிரிவில் தூக்கிய போலீஸ்!
சென்னையில் வாகன சோதனையின் போது நிற்காமல் சென்ற காரை துரத்திய காவலர் மேகநாதன், அதே கார் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தை ஏற்படுத்திய மதுபோதையில் இருந்த ஓட்டுநர், பின்னர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தெரிவித்ததை அடுத்து கைது.

சென்னை மடிப்பாக்கத்தில் வாகன போக்குவரத்து போலீசார் மேகநாதன் (35) என்பவர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது கார் ஒன்று சாலையில் அங்கும் இங்குமாக சென்றது. கார் ஓட்டுனர் போதையில் இருப்பதை அறிந்த போலீசார் மடக்கியுள்ளனர். ஆனால், நிற்காமல் அதிவேகமாக சென்றது. இதனைத்தொடர்ந்து காவலர் மேகநாதன் இருசக்கர வாகனத்தில் அந்த காரை விரட்டி சென்றுள்ளார்.
கார் வேகமாக சென்ற நிலையில் 200 அடி சாலையில் காமாட்சி மருத்துவமனை அருகே சென்ற போது திடீரென அந்த கார் காவலர் மேகநாதனின் இருசக்கர வாகனத்தில் மோதியுள்ளது. சுமார் 20 மீட்டர் தூரம் துரத்திற்கு மேகநாதன் இழுத்துச் செல்லப்பட்டார். இதில் காவலர் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
ஆனால் விபத்தை ஏற்படுத்தி விட்டு கார் நிற்காமல் சென்றுள்ளது. இதனையடுத்து படுகாயமடைந்த காவலரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தை அடுத்து காவலர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். இதனிடையே சாய்ராம் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறிக்கை போன் செய்து, தனது காரில் தான் அடிபட்டு காவலர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து மதுபோதையில் கார் ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்திய சாய்ராம்(32) என்பவரை "HIT and RUN" பிரிவின் கீழ் கைது செய்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

