- Home
- Tamil Nadu News
- சென்னையில் அதிர்ச்சி! ஸ்கேன் எடுக்க சென்ற 48 வயது பெண்! கண்ட இடத்தில் கை வைத்த 28 வயது இளைஞர்!
சென்னையில் அதிர்ச்சி! ஸ்கேன் எடுக்க சென்ற 48 வயது பெண்! கண்ட இடத்தில் கை வைத்த 28 வயது இளைஞர்!
சென்னை கொளத்தூர் ரெட்டேரியில் உள்ள ஆர்த்தி ஸ்கேன் மையத்தில் சி.டி.ஸ்கேன் எடுக்கச் சென்ற 47 வயது பெண்ணிடம், ஊழியர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

தமிழ்நாட்டில் மதுரை, சென்னை, தஞ்சாவூர் போன்ற பெருநகரங்களில் மட்டுமல்லாமல் கோவில்பட்டி, தென்காசி மற்றும் ராஜபாளையம் போன்ற சிறிய நகரங்களிலும் ஆர்த்தி ஸ்கேன் சென்டர் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை புழல் பகுதியை சேர்ந்தவர் 47 வயது பெண். இவருக்கு கர்ப்பப்பை தொற்று இருந்து வந்ததை அடுத்து மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் கொளத்தூர் ரெட்டேரி பகுதியில் உள்ள ஆர்த்தி ஸ்கேன் மையத்தில் சி.டி.ஸ்கேன் எடுப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது ஸ்கேன் சென்டரில் வேலை பார்த்து வந்த இளைஞர் கண்ட இடத்தில் கை வைத்து அப்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் அங்கிருந்து வீட்டிற்கு வந்துள்ளார். இதனையடுத்து நடந்த சம்பவத்தை தனது கணவரிடம் அப்பெண் கூறியுள்ளார். இதனையடுத்து இருவரும் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.