- Home
- குற்றம்
- பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
ஊட்டி வாலிபர் 10-ம் வகுப்பு மாணவி மற்றும் கல்லூரி மாணவி என இருவரையும் ஒரே நேரத்தில் காதலித்து கர்ப்பமாக்கியுள்ளார். பள்ளி மாணவிக்கு பெண் குழந்தையும், கல்லூரி மாணவிக்கு ஆண் குழந்தையும் பிறந்த நிலையில், பிரவீன் போக்சோ சட்டத்தில் கைது.

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் பிரவீன் (22). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கும் ஊட்டியில் 10-ம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. பின்னர் அடிக்கடி பல்வேறு இடங்களில் சுற்றி வந்தது மட்டுமல்லாமல் நெருக்கமாகவும் இருந்துள்ளனர். இந்நிலையில் திடீரென இருவருக்கும் சண்டை ஏற்பட்டு பிரிந்துள்ளனர்.
அப்போது ஊட்டியில் ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரையும் காதலிப்பதாக கூறி ஊர் சுற்றி வந்துள்ளார். இதனிடையே பள்ளி மாணவியுடன் சமாதானம் ஆனதை அடுத்து அவருடனுடன் மீண்டும் பழகி வந்துள்ளார். அப்போது பள்ளி மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் வேலை முடிந்ததும் அவருடன் மீண்டும் தகராறு ஏற்பட்டு பிரிந்து விட்டார்.
இதையடுத்து கல்லூரி மாணவியுடன் பிரவீன் நெருங்கி பழகி வந்தார். இதில் அவர் கர்ப்பம் அடைந்தார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு கல்லூரி மாணவி கர்ப்பமானது தெரியவந்ததால், அவரது வீட்டிற்கு தெரியாமல் பிரவீன் மாணவியை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். அவருக்கு கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதனிடையே பள்ளி மாணவிக்கு கடந்த 3-ம் தேதி திடீரென வயிறு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். இதனை கேட்டு தாய் அதிர்ச்சி அடைந்தார். சிறிது நேரத்தில் பள்ளி மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது.
இதுகுறித்து மருத்துவர்கள் ஊட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதுதொடர்பாக பள்ளி மாணவியிடம் யார் காரணம் என்று விசாரணை நடத்தியதில் பிரவீன் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக பிரவீனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் கை குழந்தைகளுடன் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

