Published : Dec 08, 2023, 07:32 AM ISTUpdated : Dec 08, 2023, 11:06 PM IST

Tamil News Live Updates: ஒரு மாத ஊதியத்தை நிவாரணத்திற்காக வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

சுருக்கம்

மிக்ஜாம் புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு என்னுடைய ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், அனைத்து சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிதி அளித்திடுமாறு வேண்டு கோள் விடுப்பதாக கேட்டுக்கொண்டுள்ளார். 

 

11:06 PM (IST) Dec 08

ஒரு நாளைக்கு 4 மணி நேரத்துக்கு மேல் ஸ்மார்ட்ஃபோனைப் பயன்படுத்தினால்.. இந்த நோய்கள் எல்லாம் வரும்..

ஒரு நாளைக்கு 4 மணி நேரம் ஸ்மார்ட்ஃபோனைப் பயன்படுத்தினால் உங்கள் மனநலம் பாதிக்கப்படலாம் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10:30 PM (IST) Dec 08

உலகளவில் பிரபல தலைவர்கள் பட்டியலில் முதலிடத்தில் பிரதமர் மோடி.. சர்வேயில் தகவல்.!!

முதலிடத்தில் பிரதமர் மோடி இடம்பெற்றுள்ளார். மெக்சிகோவின் அதிபர் ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் 66 சதவீத மதிப்பீட்டில் இரண்டாவது இடத்திலும், சுவிட்சர்லாந்தின் அலைன் பெர்செட் 58 சதவீத மதிப்பீட்டுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

10:15 PM (IST) Dec 08

வீட்டில் இவ்வளவு பணம் வைத்திருக்கிறீர்களா.? அவ்ளோதான்.. 137 சதவீதம் அபராதம்.. எவ்வளவு தெரியுமா?

இப்போது வீட்டில் இவ்வளவு பணத்துக்கு மேல் கிடைத்தால், 137 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். இது தொடர்பான வருமான வரி விதிகளை தெரிந்து கொள்ளுங்கள்.

09:36 PM (IST) Dec 08

நெட்பிளிக்ஸ்.. அமேசான் ப்ரைம் இலவசம்.. 100GB டேட்டாவும் இருக்கு - ஜியோவின் ரீசார்ஜ் திட்டம்..

ரிலையன்ஸ் ஜியோவின் அற்புதமான திட்டத்தின் மூலம் Netflix, Amazon Prime சந்தா இலவசம், 100GB டேட்டா மற்றும் வரம்பற்றஅன்லிமிடெட் அழைப்புகள் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

09:03 PM (IST) Dec 08

சூரியனா இது.. ஆதித்யா-எல்1 எடுத்த புகைப்படங்கள்.. இஸ்ரோவின் மிகப்பெரிய சாதனை..!!

இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்1 விண்கலம் நிர்ணயிக்கப்பட்ட பாதையை நோக்கி விரைகிறது. அதன் அதிநவீன சோலார் அல்ட்ரா வயலட் இமேஜிங் டெலஸ்கோப் (SUIT) சூரியனின் புற ஊதா அலைநீளங்களை வெற்றிகரமாகப் படம்பிடித்து, ஒரு அரிய மைல்கல்லை எட்டியுள்ளது.

08:48 PM (IST) Dec 08

ரூ.4,000 கோடி அல்ல, ரூ.5,166 கோடி: இதுதான் கணக்கு - கே.என்.நேரு விளக்கம்!

மழைநீர் வடிகால் பணிகளுக்கான தொகை ரூ.4,000 கோடி அல்ல, ரூ.5,166 கோடி என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார்

 

08:08 PM (IST) Dec 08

காவல் நிலையத்துக்குள் பெண்ணை சுட்ட போலீஸ்: உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சி!

காவல் நிலையத்துக்குள் வைத்து பெண் ஒருவரை போலீஸ் ஒருவர் துப்பாக்கியை வைத்து சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

 

07:45 PM (IST) Dec 08

ரொம்ப நன்றிப்பா.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்த மக்கள் இயக்க நிர்வாகிக்கு நன்றி சொன்ன நடிகர் விஜய்

மிக்ஜாம் புயலின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு இடங்களில் உதவி செய்து வருகின்றனர்.

07:08 PM (IST) Dec 08

17 லோன் ஆப்ஸ்களை அதிரடியாக நீக்கிய கூகுள்.. என்னென்ன ஆப்ஸ் தெரியுமா?

உளவு பார்த்தல், மோசடியான நடைமுறைகளுக்காக 17 லோன் ஆப்ஸை கூகுள் நீக்கியுள்ளது. அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

07:04 PM (IST) Dec 08

மைக்ரோபிளாஸ்டிக்ஸ் மாசுபாடு: வீடுகளுக்கு முக்கிய பங்கு - ஐஐடி ஆய்வில் தகவல்!

மைக்ரோபிளாஸ்டிக்ஸ் மாசுபாட்டை ஏற்படுத்துவதில் வீடுகள் முக்கிய பங்கு வகிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது

 

06:31 PM (IST) Dec 08

ரூ.500 முதலீடு செய்வதன் மூலம் பணக்காரர் ஆகலாம்.. வரி கிடையாது.. அருமையான சேமிப்பு திட்டம்..

ரூ. 500 முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் கோடீஸ்வரராகிவிடுவீர்கள். அதுமட்டுமின்றி இதனால் வரி விதிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

06:15 PM (IST) Dec 08

1465 வழித்தட கி.மீ., 139 ரயில் என்ஜின்களில் கவாச் அமைப்பு: மத்திய அமைச்சர் தகவல்!

கவாச் அமைப்பு 1465 வழித்தட கி.மீ மற்றும் 139 ரயில் என்ஜின்களில் நிறுவப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்

 

05:35 PM (IST) Dec 08

நியூ இயர் தள்ளுபடி.. மஹிந்திரா கார்களுக்கு ரூ. 4.2 லட்சம் வரை டிஸ்கவுண்ட்.!!

மஹிந்திரா நிறுவனம் இந்த ஆண்டு இறுதி தள்ளுபடிகளை (டிசம்பர் 2023) அறிவித்துள்ளது. ரூ. 4.2 லட்சம் வரை டிஸ்கவுண்ட் இதன் மூலம் பெறலாம்.

05:30 PM (IST) Dec 08

துரை தயாநிதிக்கு மூளை பகுதியில் 6 அடைப்புகள் அகற்றம்?

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் துரை தயாநிதிக்கு மூளை பகுதியில் 6 அடைப்புகள் அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

 

05:10 PM (IST) Dec 08

'மேக் இன் இந்தியா'க்குப் பிறகு.. 'வெட் இன் இந்தியா' - பிரதமர் நரேந்திர மோடி சொன்ன புது ஐடியா..!

'மேக் இன் இந்தியா'க்குப் பிறகு, இந்தியாவில் 'வெட் இன் இந்தியா' இயக்கத்தைத் தொடங்குவதற்கான நேரம் இது என்று உத்தரகாண்ட் முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

05:01 PM (IST) Dec 08

NHAI விதிகளுக்குப் புறம்பான சுங்கச் சாவடி தமிழகத்தில் இல்லை: மத்திய அரசு பதில்!

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் விதிகளுக்குப் புறம்பான சுங்கச் சாவடி எதுவும் தமிழ்நாட்டில் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது

 

03:37 PM (IST) Dec 08

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தகுதி நீக்கம்!

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா நாடாளுமன்ற மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்

 

03:24 PM (IST) Dec 08

சீன முன்னாள் வெளியுறவு அமைச்சர் குயின் கேங் மரணம்: தற்கொலையா? சித்தரவதையா?

சீன முன்னாள் வெளியுறவு அமைச்சர் குயின் கேங் உயிரிழப்பு தொடர்பாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

 

03:14 PM (IST) Dec 08

கான்ஜுரிங் கண்ணப்பன் விமர்சனம் இதோ

Conjuring Kannappan movie Review : சதீஷ், ரெஜினா கசெண்ட்ரா நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் கான்ஜுரிங் கண்ணப்பன் திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

02:50 PM (IST) Dec 08

ஸ்டாப் தாலி கட்டாதீங்க: ஷாக் கொடுத்த மணப்பெண்; அதிர்ச்சியில் உறைந்த மணமகன்!

தாலி கட்டும்போது திருமணத்துக்கு மணப்பெண் மறுப்பு தெரிவித்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது

 

02:18 PM (IST) Dec 08

இபிஎஸ் கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை! சட்டத்தின் முன் அனைவரும் சமம்! சாட்டையை சுழற்றிய கோர்ட்

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் சாட்சியம் அளிக்க நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

02:13 PM (IST) Dec 08

ஜெயலலிதா தான் நீலாம்பரியா... தெருவுல நடமாட முடியாது பாத்துக்கோங்க - கே.எஸ்.ரவிக்குமாரை எச்சரித்த ஜெயக்குமார்

படையப்பா படத்தில் வரும் நீலாம்பரி கேரக்டர் ஜெயலலிதாவை மனதில் வைத்து எழுதியதாக கூறிய இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாருக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

01:44 PM (IST) Dec 08

மிக்ஜாம் புயல்: நன்கொடை வழங்கிட தமிழக அரசு வங்கி விவரங்கள் அறிவிப்பு!

மிக்ஜாம் புயல் நிவாரணப் பணிகளுக்கு நன்கொடை வழங்கிட தமிழக அரசு சார்பில் வங்கி விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன

 

01:22 PM (IST) Dec 08

டிசம்பர் 24-ந் தேதி நடைபெற இருந்த கலைஞர் 100 நிகழ்ச்சி திடீரென தள்ளிவைப்பு - காரணம் என்ன?

சென்னையில் வருகிற டிசம்பர் 24-ந் தேதி நடைபெறுவதாக இருந்த கலைஞர் 100 நிகழ்ச்சி திடீரென ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

12:54 PM (IST) Dec 08

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.3 கோடியை வழங்கிய டிவிஎஸ் நிறுவனம்

மிக்ஜாம் புயல் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.3 கோடியை டிவிஎஸ் நிறுவனம் வழங்கியது. டிவிஎஸ் குழுமத்தின் தலைவர் வேணு சீனிவாசன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து காசோலையை வழங்கினார்

12:50 PM (IST) Dec 08

DMK Youth State Convention : திமுக இளைஞர் அணி மாநில மாநாடு ஒத்திவைப்பு.! புதிய தேதியை அறிவித்த திமுக தலைமை

சேலத்தில் வருகிற 17 ஆம் தேதி நடைபெற இருந்த திமுக இளைஞர் அணி மாநாடு நடைபெறுவதற்கான பணி நடைபெற்று வரும் நிலையில், மிக்ஜாம் புயல் பாதிப்பால் மாநாடு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

12:49 PM (IST) Dec 08

Chennai Rain : சென்னையில் 444 லாரிகள் மூலம் 4227 நடைகள் குடிநீர் விநியோகம்.. உதவி எண்கள் அறிவிப்பு.!

மழைநீர் தேங்கிய பகுதிகளில் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் இதுவரை 45 இலட்சம் குளோரின் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது என சென்னை குடிநீர் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

12:10 PM (IST) Dec 08

தமிழ்நாட்டில் யூரியா, டி.ஏ.பி உரங்களுக்கு தட்டுப்பாடு.. விவசாயிகளுக்காக குரல் கொடுக்கும் ராமதாஸ்..!

தமிழ்நாட்டில் யூரியா, டிஏபி உரங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், விவசாயிகளின் துயர் துடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு  ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார்.

11:33 AM (IST) Dec 08

யாஷின் அடுத்த பட டைட்டில்

கேஜிஎப் 2 படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் நடிகர் யாஷ் நடிக்க உள்ள அடுத்த படத்துக்கு டாக்சிக் என பெயரிடப்பட்டு உள்ளதாக அறிவித்து உள்ளனர்.

11:12 AM (IST) Dec 08

தப்ப ஒத்துக்கங்க! அதுக்காக இயற்கை மேல் பழியை போட்டு தப்பிக்க நினைக்காதீங்க! ஆளுங்கட்சியை அலறவிடும் அண்ணாமலை!

கடந்த பத்து ஆண்டுகளில் மூன்று முறை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரே மாநகரம் சென்னை. மீண்டும் ஒருமுறை வெள்ளத்தால் சென்னை பாதிக்கப்பட்டால், மக்கள் யாரையும் மன்னிக்க மாட்டார்கள் என அண்ணாமலை கூறியுள்ளார். 

09:50 AM (IST) Dec 08

எவன் எப்படி போனா எனக்கென்ன... மிக்ஜாம் புயலால் 2 ரீல்ஸ் தேறுச்சு - ஷிவானியின் செயலால் கடுப்பான நெட்டிசன்கள்

மிக்ஜாம் புயலால் சென்னையே வெள்ளத்தில் தத்தளித்து வரும் சூழலில், ஜாலியாக டான்ஸ் ஆடி வீடியோ போட்ட நடிகை ஷிவானியை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

09:27 AM (IST) Dec 08

வேளச்சேரி பள்ளத்தில் சிக்கிய 2 தொழிலாளர்களில் ஒருவரது உடல் மீட்பு

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை - வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலைக்கு அருகே அமைந்துள்ள பெட்ரோல் பங்க் அருகில் கட்டுமான பகுதிக்காக வெட்டப்பட்ட சுமார் 50 அடி ஆழ பள்ளத்தில் சிக்கிய 2 தொழிலாளர்களில் ஒருவரது உடல் இன்று அதிகாலை மீட்கப்பட்டது.

08:36 AM (IST) Dec 08

என்னது.. சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி சென்னை தலைநகரை காப்பாற்றினாரா? எப்படி தெரியுமா?

மின்சாரத்துறை அமைச்சராக இருந்த போது செந்தில் பாலாஜி எடுத்த அதிரடி நடவடிக்கையே தலைநகர் சென்னையை பெரும் வெள்ளம் தலைகீழாக புரட்டிபோட்ட போதும் உடனடியாக மின்சாரம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.  

08:09 AM (IST) Dec 08

Chennai Floods: சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட மக்களுக்கு குட்நியூஸ்.. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய  4 மாவட்டங்களில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளும் இன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

07:37 AM (IST) Dec 08

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.. கெத்தாக மருத்துவமனையில் இருந்து மீண்டும் வீடு திரும்பிய விஜயகாந்த்.!

உடல் நலக்குறைவு காரணமாக  சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 

 

07:36 AM (IST) Dec 08

Durai Dayanidhi: மு.க.அழகிரி மகன் துரை தயாநிதிக்கு என்ன ஆச்சு? நேரில் சென்று விசாரித்த முதல்வர் ஸ்டாலின்?

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


More Trending News