டிசம்பர் 24-ந் தேதி நடைபெற இருந்த கலைஞர் 100 நிகழ்ச்சி திடீரென தள்ளிவைப்பு - காரணம் என்ன?

சென்னையில் வருகிற டிசம்பர் 24-ந் தேதி நடைபெறுவதாக இருந்த கலைஞர் 100 நிகழ்ச்சி திடீரென ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Kalaignar 100 function which scheduled on december 24 is postponed gan

அரசியலை போல் சினிமாவிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் கலைஞர் கருணாநிதி. ஏராளாமன தமிழ் படங்களுக்கு வசனகர்த்தாவாக பணியாற்றி இருக்கிறார். இவர கைவண்ணத்தில் வெளியான பராசக்தி படத்தின் டயலாக்குகள் ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கலைஞர் திரையுலக பயணத்தை போற்றும் வகையில் கலைஞர் 100 என்கிற நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

தமிழ் சினிமாவில் உள்ள நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், பெப்சி என ஒட்டு மொத்த சங்கங்களும் இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்த இருந்தனர். இதற்காக அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வந்தது. வருகிற டிசம்பர் 24ந் தேதி சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட இருந்தது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதனிடையே டிசம்பர் 24-ந் தேதி கலைஞர் 100 நிகழ்ச்சியை நடத்த எதிர்ப்புகளும் கிளம்பின. ஏனெனில் அன்றைய தினம் எம்.ஜி.ஆரின் நினைவு தினம் என்பதால் அன்றைய தினம் கலைஞர் நூற்றாண்டு விழா நடத்தக்கூடாது என அதிமுகவினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை ஏற்று தற்போது கலைஞர் 100 விழாவை தள்ளிவைத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

விரைவில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவது எப்போது என்கிற புதிய தேதியை அறிவிப்போம் எனவும் கூறி உள்ளனர். அநேகமாக ஜனவரி மாதம் இந்த நிகழ்ச்சியை நடத்த அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. அது நடக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்... உதவ மறுக்கும் தீபா; சதி வேலையில் இறங்கிய ஐஸ்வர்யா... தப்பிப்பாரா கார்த்திக்? கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios