MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • லியோ பாணியில்... ஷூட்டிங் தொடங்கும் முன்பே ரிலீஸ் தேதியோடு வெளிவந்த யாஷின் அடுத்த பட டைட்டில்

லியோ பாணியில்... ஷூட்டிங் தொடங்கும் முன்பே ரிலீஸ் தேதியோடு வெளிவந்த யாஷின் அடுத்த பட டைட்டில்

கேஜிஎப் 2 படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் நடிகர் யாஷ் நடிக்க உள்ள அடுத்த படத்துக்கான டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.

1 Min read
Author : Ganesh A
Published : Dec 08 2023, 11:23 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Actor Yash

Actor Yash

கன்னட திரையுலகை மிகப்பெரிய உயரத்துக்கு கொண்டு சென்ற படம் என்றால் அது கேஜிஎப் தான். இப்படம் இதுவரை இரண்டு பாகங்கள் வெளியாகி உள்ளன. இந்த இரண்டு பாகங்களுமே மிகப்பெரிய வெற்றி பெற்றன. அதிலும் குறிப்பாக கடந்தாண்டு ரிலீஸ் ஆன கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனை நிகழ்த்தியதோடு ரூ.1100 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்தது. 

24
kgf actor Yash, geethu mohandas

kgf actor Yash, geethu mohandas

கேஜிஎப் 2 படம் ரிலீஸ் ஆகி ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் தன்னுடைய அடுத்த பட அறிவிப்பை வெளியிடாம சீக்ரெட்டாக வைத்திருந்த யாஷ், கடந்த வாரம் அதுகுறித்து ஒரு அப்டேட்டை கொடுத்தார். அதன்படி யாஷின் 19-வது திரைப்படத்தை கீத்து மோகன் தாஸ் இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இப்படத்திற்கான டைட்டில் டிசம்பர் 8-ந் தேதி அறிவிக்கப்படும் எனவும் அந்த அப்டேட்டில் குறிப்பிட்டிருந்தனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
Yash next movie Title Toxic

Yash next movie Title Toxic

இந்த நிலையில், டிசம்பர் 8-ந் தேதியான இன்று யாஷின் 19-வது பட டைட்டில் ரிலீஸ் ஆகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு டாக்சிக் என பெயரிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். இப்படத்தை கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மாஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

44
toxic release date

toxic release date

அதோடு இப்படத்தின் ஷூட்டிங்கே இன்னும் தொடங்கப்படாத நிலையில், அதன் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். அதன்படி இப்படம் வருகிற 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ந் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் அண்மையில் ரிலீஸ் ஆன லியோ படக்குழுவும் ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு ஷூட்டிங்கை தொடங்கினர். தற்போது யாஷின் டாக்சிக் படக்குழுவும் அதே பார்முலாவை பின்பற்றி உள்ளது.

இதையும் படியுங்கள்... கமலின் பிடிவாதத்தால் தான் ஆளவந்தான் பிளாப் ஆனதா? பலரும் அறிந்திடாத ஷாக்கிங் சீக்ரெட்டை சொன்ன பிரபலம்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
யாஷ்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved