Asianet News TamilAsianet News Tamil

காஞ்சனாவுக்கே டஃப் கொடுக்கும் பேய் படமாக இருந்ததா கான்ஜுரிங் கண்ணப்பன்? முழு விமர்சனம் இதோ

Conjuring Kannappan movie Review : சதீஷ், ரெஜினா கசெண்ட்ரா நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் கான்ஜுரிங் கண்ணப்பன் திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Sathish starrer Conjuring Kannappan movie review gan
Author
First Published Dec 8, 2023, 3:10 PM IST

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்கி வந்தவர் சதீஷ். இவர் கடந்த ஆண்டு வெளிவந்த நாய்சேகர் படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானார். அப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவருக்கு ஹீரோவாக நடிக்கும் வாய்ப்புகள் குவிந்தன. இருப்பினும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என முடிவெடுத்து சதீஷ் தேர்வு செய்த படம் தான் கான்ஜுரிங் கண்ணப்பன்.

இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்தில் சதீஷ் உடன் ரெஜினா கசெண்ட்ரா, ஆனந்தராஜ், ரெடின் கிங்ஸ்லி, சரண்யா பொன்வண்ணன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. செல்வின்ராஜ் சேவியர் என்கிற புதுமுக இயக்குனர் தான் இப்படத்தை இயக்கி உள்ளார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். கான்ஜுரிங் கண்ணப்பன் படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், அதன் எக்ஸ் தள விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Sathish starrer Conjuring Kannappan movie review gan

தனித்துவமான கான்செப்ட் உடன் கூடிய நல்ல கதையம்சம் கொண்ட படமாக இருந்தாலும் நன்றாக ஆரம்பித்து போகப்போக வேகத்தை இழந்துள்ளது. கதைக்கு தேவையில்லாத காட்சிகளை நீக்கி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். ரியல் பிளாஷ்பேக் சீனுக்கு பின்னர் படம் நன்றாகவே இருந்தது. மொத்தத்தில் இது ஒரு ஆவரேஜ் ஆன படம் என பதிவிட்டுள்ளார்.

கான்ஜுரிங் கண்ணப்பன் நகைச்சுவையாக இருந்தது. சதீஷ் மற்றும் ரெஜினாவின் நடிப்பு நன்றாக உள்ளது. ஆனந்தராஜும், ரெடின் கிங்ஸ்லியும் காமெடி காட்சிகளில் ஸ்கோர் செய்து உள்ளனர். கதாபாத்திர தேர்வு கச்சிதம். இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. நல்ல கதைக்களம், காமெடி மற்றும் திகில் காட்சிகள் உடன் உள்ள இப்படத்தை பேமிலியோடு பார்க்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் வெளியானதில் சிறந்த திகில் படமாக கான்ஜுரிங் கண்ணப்பன் உள்ளது. காமெடி மிகவும் அருமையாக உள்ளது. இசையும் சூப்பர். சிறந்த திரையரங்க அனுபவத்தை இப்படம் கொடுத்தது. மிஸ் பண்ணாதிங்க மக்களே என பதிவிட்டுள்ளார்.

கான்ஜுரிங் கண்ணப்பன் வின்னப்பா. புது கான்செப்ட் உடன் கூடிய பேய் கதை. சதீஷ் தன் நடிப்பால் கவனம் ஈர்த்துள்ளார். ரெஜினா எப்பையும் போல மிளிர்கிறார். விடிவி கணேஷ், ஆனந்தராஜ் என காமெடி நடிகர்கள் அனைவரும் ஸ்கோர் செய்துள்ளனர். சில இடங்களில் மட்டும் காமெடி ஒர்க் அவுட் ஆகவில்லை. இரண்டாம் பாதியைவிட முதல் பாதி மிக அருமையாக இருந்தது என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... ஜெயலலிதா தான் நீலாம்பரியா... தெருவுல நடமாட முடியாது பாத்துக்கோங்க - கே.எஸ்.ரவிக்குமாரை எச்சரித்த ஜெயக்குமார்

Follow Us:
Download App:
  • android
  • ios