- Home
- Gallery
- Durai Dayanidhi: மு.க.அழகிரி மகன் துரை தயாநிதிக்கு என்ன ஆச்சு? நேரில் சென்று விசாரித்த முதல்வர் ஸ்டாலின்?
Durai Dayanidhi: மு.க.அழகிரி மகன் துரை தயாநிதிக்கு என்ன ஆச்சு? நேரில் சென்று விசாரித்த முதல்வர் ஸ்டாலின்?
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
13

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரனும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகனுமான துரை தயாநிதி சென்னை வீட்டில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் பதறிப்போன குடும்பத்தினர் அவரை மீட்டு உடனே சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
Add Asianetnews Tamil as a Preferred Source

23
அங்கு மருத்துவர்கள் துரை தயாநிதிக்கு பல்வேறு பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு பிரெய்ன் ஸ்ட்ரோக் எனப்படும் மூளை பக்கவாத பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியானது.
33
இந்த செய்தியை அறிந்த துரை தயாநிதியின் சித்தப்பாவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார். ஆனால், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.
Latest Videos