என்னது.. சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி சென்னை தலைநகரை காப்பாற்றினாரா? எப்படி தெரியுமா?
சென்னையில் கடந்த 2021ஆம் ஆண்டு பெய்த கனமழையின்போது, சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. மின் விநியோகம் பெரும்பாலான இடங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டது. மின்சார வாரியத்திற்கு பெரிய அளவில் சேதம் ஏற்பட்டது.
மின்சாரத்துறை அமைச்சராக இருந்த போது செந்தில் பாலாஜி எடுத்த அதிரடி நடவடிக்கையே தலைநகர் சென்னையை பெரும் வெள்ளம் தலைகீழாக புரட்டிபோட்ட போதும் உடனடியாக மின்சாரம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சென்னையில் கடந்த 2021ஆம் ஆண்டு பெய்த கனமழையின்போது, சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. மின் விநியோகம் பெரும்பாலான இடங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டது. மின்சார வாரியத்திற்கு பெரிய அளவில் சேதம் ஏற்பட்டது. அப்போது மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் மின்சார விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டதற்கான காரணங்களை ஆய்வு செய்தார். மழைநீர் தேங்கியதால், சேதமடைந்த பில்லர் பாக்ஸ்கள் கண்டறியப்பட்டன.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
மேலும், சென்னையில் எங்கெல்லாம் மின் விநியோகப் பெட்டிகள் (பில்லர் பாக்ஸ்) தாழ்வாக இருக்கிறதோ அதெல்லாம் கணக்கெடுக்கப்பட்டது. சென்னையின் பெரும்பாலான இடங்களில் பில்லர் பாக்ஸ்கள் தாழ்வாகவே இருந்தன. இதையடுத்து, உடனடியாக, தாழ்வாக இருந்த பில்லர் பாக்ஸ் அனைத்தும் ஒரு மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டன. குறிப்பாக தண்ணீர் தேங்கும் இடங்களில் இருக்கும் துணைமின் நிலையங்களில் உள்ள டிரான்ஸ் பார்மர்களின் உயரமும் அதிகரிக்கப்பட்டது.ஆகையால், கடந்த ஆண்டு மாண்டஸ் புயல் கரையை கடந்தபோது, சென்னையில் பெய்த பெருமழையின்போது மின்வெட்டு தவிர்க்கப்பட்டது.
இதையும் படிங்க;- சென்னையை மீண்டும் ஒரு புயல் தாக்கப்போகுவதா? அலறும் பொதுமக்கள்! தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுவது என்ன?
இந்நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், தலைநகர் சென்னையே தண்ணீரில் தத்தளித்தது. எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் வினியோகம் நிறுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து மழை மெல்ல மெல்ல குறைந்ததை அடுத்து 2 மணி நேரத்தில் மின் விநியோகம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருந்தார்.
அதன்படியே, புயல் சென்னையை விட்டு விலகிய நிலையில் சென்னையில் மழையின் வேகம் குறைந்ததை அடுத்து நள்ளிரவில் சென்னையின் பல்வேறு இடங்களில் மின் விநியோகம் வழங்கப்பட்டது. மழைநீர் அகற்றப்பட்ட பகுதிகளை ஒவ்வொரு பகுதியாக ஆய்வு செய்து, மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி சென்னையில் சுமார் 80% இடங்களுக்கு மின் விநியோகம் வழங்கப்பட்டு விட்டது. மழை நீர் வடியாத இடங்களில் மட்டுமே மின் விநியோகம் வழங்கப்படவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருந்தாலும், அவர் மின்வாரியத்துறைக்கு செய்த அதிரடி நடவடிக்கையே மின்சார டிரான்ஸ்பார்கள், பில்லர் பாக்ஸ்களுக்கு அதிகம் சேதம் ஏற்படாமல் இருந்ததால் விரைவாக மின் விநியோகம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.