வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.. கெத்தாக மருத்துவமனையில் இருந்து மீண்டும் வீடு திரும்பிய விஜயகாந்த்.!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே ஓய்வு இருந்து வருகிறார். அவ்வப்போது மியாட் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தார்.
உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் எந்த கட்சி நிகழ்விலும் கலந்து கொள்ளாமல் சில ஆண்டுகளாகவே வீட்டிலேயே ஓய்வு இருந்து வருகிறார். அவ்வப்போது மியாட் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில், கடந்த 18ம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதையும் படிங்க;- Velumani: விஜயகாந்த் உடல்நிலை குறித்து பரவிய அவதூறு செய்திகள்! மனம் உடைந்து... உயிர்விட்ட திரையுலக பிரபலம்!
அவரது உடல்நிலை சீராக இல்லை நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவின. ஆனால், இதனை பிரேமலதா விஜயகாந்த் திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும், விஜயகாந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போட்டோக்களும் வெளியிடப்பட்டது. அவர் மீண்டு வரவேண்டும் என தொண்டர்களும் ரசிகர்களும் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி வந்தனர்.
இதையும் படிங்க;- Vijayakanth Health: விஜயகாந்த் உடல்நிலை எப்படி இருக்கு..? பிரேமலதா விஜயகாந்த் கூறிய தகவல்!
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு உடல் நலம் தேறியுள்ள நிலையில் மருத்துவமனையில் நேற்று இரவு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.