மணிப்பூரில் நிவாரணப் பணிகளை பார்வையிட குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.

11:01 PM (IST) Aug 07
வாட்ஸ்அப் தற்போது புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. வாட்ஸ்அப் குழுவில் பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டு வருகிறது.
09:54 PM (IST) Aug 07
வரவிருக்கும் 2023ம் ஆண்டின் சுதந்திர தினத்தில் கட்டாயம் படிக்க வேண்டிய 6 புத்தகங்களை பற்றி பார்க்கலாம்.
09:42 PM (IST) Aug 07
புழல் சிறையில் இருந்து 4 அதிகாரிகள் ஒரு காரில் செந்தில் பாலாஜியை தங்கள் நுங்கம்பாக்கம் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.
08:49 PM (IST) Aug 07
தனியார் நிறுவன செய்தியாளர் லெனின் என்பவர் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
07:56 PM (IST) Aug 07
சந்திரனின் தென்துருவத்தை ஆய்வுசெய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் இஸ்ரோவால் கடந்த மாதம் 14-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.
07:11 PM (IST) Aug 07
கலைஞருக்கும் பிடிக்கக் கூடிய திட்டம் நான் முதல்வன் திட்டம். நான் முதல்வன் திட்டம் என்னுடைய கனவு திட்டம் மாணவர்கள், இளைஞர்கள் இடையே பெரிய மாற்றத்தை ஏற்படுத்த நான் முதல்வன் திட்டம் காரணமாக அமைந்துள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
06:51 PM (IST) Aug 07
அமைச்சருக்கும், பாடநூல் கழகத்துக்கும் மாணவர்களின் நலனை விட கோபாலபுர குடும்பத்தின் தவைகளை நிறைவேற்றுவதே முக்கியமாகப் போய்விட்டது என்று குற்றஞ்சாட்டியுள்ளார் அண்ணாமலை.
05:58 PM (IST) Aug 07
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது.
05:10 PM (IST) Aug 07
திருடப்பட்ட மொபைலை திருடர்கள் பயன்படுத்த முடியாதவாறு செய்ய முடியும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதனைப் பற்றி முழுமையாக இங்கு காணலாம்.
04:43 PM (IST) Aug 07
பிரிட்டிஷ்-அரபை சேர்ந்தவரான அம்ஜத் தாஹா வெளியிட்ட பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
04:31 PM (IST) Aug 07
தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு பல்வேறு இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
03:15 PM (IST) Aug 07
2,000 ரூபாய் நோட்டு வைத்திருப்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதனை பற்றி முழுமையாக காண்போம்.
01:31 PM (IST) Aug 07
அமைச்சர் செந்தில் பாலாஜியை டெல்லி அழைத்து சென்று விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
01:08 PM (IST) Aug 07
அயோத்தி ராமர் கோயில் அடுத்த ஆண்டு ஜனவரியில் திறக்கப்படும் நிலையில், அலிகாரைச் சேர்ந்த வயதான கைவினைஞர் சத்ய பிரகாஷ் சர்மா, அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு 400 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட பூட்டு ஒன்றை உருவாக்கியுள்ளார்.
01:02 PM (IST) Aug 07
ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அப்படம் குறித்து நடிகர் தனுஷ் போட்டுள்ள டுவிட் வைரலாகி வருகிறது.
12:32 PM (IST) Aug 07
சென்னை மெரீனா கடற்கரை குதிரைகளுக்கு லைசென்ஸ் வழங்க தமிழ்நாடு கால்நடை நலவாரியம் முடிவு செய்துள்ளது
12:32 PM (IST) Aug 07
PM KISAN விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தில் கடந்த மூன்றாண்டுகளில் ஏராளமான விவசாயிகளின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
11:42 AM (IST) Aug 07
பிரபல கன்னட நடிகர் விஜய ராகவேந்திராவின் மனைவி ஸ்பந்தனா ராகவேந்திரா மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
11:06 AM (IST) Aug 07
அவதூறு வழக்கில் வழங்கப்பட்ட சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த நிலையில் ராகுல்காந்திக்கு மீண்டும் மக்களவை உறுப்பினர் பதவி கிடைத்துள்ளது.
10:57 AM (IST) Aug 07
10:09 AM (IST) Aug 07
மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகை அங்காடி தெரு சிந்து மரணமடைந்துள்ள நிலையில், அவர் அளித்த கடைசி பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
09:33 AM (IST) Aug 07
சந்திரயான்-3 விண்கலம் சந்திரனின் சுற்றுவட்டப் பாதையில் சனிக்கிழமை நுழைந்த பிறகு, மேடு பள்ளங்கள் நிறைந்த நிலவின் மேற்பரப்பை முதல் முறையாகப் படம் பிடித்துள்ளதாக இஸ்ரோ கூறியுள்ளது. சந்திரயான்-3 விண்கலம் எடுத்த நிலவு வீடியோவையும் வெளியிட்டுள்ளது.
09:32 AM (IST) Aug 07
தக்காளி விலை நாள் தோறும் உச்சத்தை தொட்டு வந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக தக்காளி வரத்து அதிகரித்த காரணத்தால் ஒரு கிலோ தாக்காளி 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சில்லரை வர்த்தகத்தில் 120 ரூபாய் வரை தக்காளி விற்க்கப்படுகிறது.
09:19 AM (IST) Aug 07
பிறந்த மூன்று மாதத்திலேயே மகளுக்கு இதயத்தில் ஓட்டை இருப்பதை கண்டறிந்து ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்ததாக நடிகை பிபாசா பாசு தெரிவித்துள்ளார்.
08:04 AM (IST) Aug 07
அங்காடித் தெரு நடிகை சிந்து மார்பக புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 2.15 மணியளவில் காலமானார்
08:00 AM (IST) Aug 07
அதிமுகவிலிருந்து பலத்தை எதிர்ப்பு வந்தவுடன் அண்ணாமலை அதிமுக குறித்த விமர்சனங்களை சமீபத்தில் தவிர்த்து வருவதாக தெரிவித்துள்ள திருநாவுகரசர், அதிமுக பாஜக கூட்டணி பொருந்தா கூட்டணி என விமர்சித்துள்ளார்.
08:00 AM (IST) Aug 07
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவு நாளையொட்டி, முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்
07:22 AM (IST) Aug 07
குழந்தையின் வலது கை முழுவதுமாக அகற்றப்பட்ட நிலையில் நேற்று உயிர் இழந்த சம்பவம் வேதனை தருவதாக தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, குழந்தையை இழந்து வாடும் குடும்பத்திற்கு உரிய நிவாரணமும், அக்குடும்பத்தை சார்ந்த ஒருவருக்கு அரசு வேலைவாய்பினையும் வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.
07:15 AM (IST) Aug 07
பராமரிப்புப் பணிகளுக்காக திங்கள்கிழமை (07.08.2023) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை சென்னையில், மயிலாப்பூர், அடையாறு, தாம்பரம், கிண்டி உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
07:14 AM (IST) Aug 07
இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.