Asianet News TamilAsianet News Tamil

பச்சிளம் குழந்தைக்கு கூட பாதுகாப்பு இல்லை.!மக்களை காக்கும் கடமையில் இருந்து தவறும் திமுக அரசு- விளாசும் இபிஎஸ்

குழந்தையின் வலது கை முழுவதுமாக அகற்றப்பட்ட நிலையில் நேற்று உயிர் இழந்த சம்பவம் வேதனை தருவதாக தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, குழந்தையை இழந்து வாடும் குடும்பத்திற்கு உரிய நிவாரணமும், அக்குடும்பத்தை சார்ந்த  ஒருவருக்கு அரசு வேலைவாய்பினையும் வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார். 
 

Expressing condolence over the death of a one and a half year old child  EPS has sought relief
Author
First Published Aug 7, 2023, 7:19 AM IST

குழந்தையின் கை அழுகியது

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த தஸ்தகீர்-அஜீசா தம்பதியின் குழந்தை முஹம்மது மகிர். குழந்தை மகிர் ஒன்றரை கிலோ எடையில் குறை மாதங்களில் பல்வேறு உடல் நலக்கோளாறுகளுடன் குழந்தை பிறந்துள்ளதாக கூறப்பட்டது. இந்தநிலையில் குழந்தைக்கு நரம்பியல் கோளாறுகள், மூளையில் செரிப்ரோஸ்பைனல் திரவம் ஹைட்ரோகெபால்ஸ் உள்பட பல உடல் பிரச்னைகள் தொடர்ந்தது.

இதனையடுத்து   குழந்தைக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்து ஸ்டன்ட் வைக்கப்பட்டது. இந்த ஸ்டன்ட் திடீரென வெளியே வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மீண்டும் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்தனர். அங்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்து ஐசியூவில் சிகிச்சைக்காக வைக்கப்பட்டது. அப்போது கையில் டிரிப்ஸ் போடப்பட்டிருந்த நிலையில் குழந்தையின் கை அழுக தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் புகார் தெரிவித்தனர். 

Expressing condolence over the death of a one and a half year old child  EPS has sought relief

குழந்தை திடீர் உயிர் இழப்பு

இதனையடுத்து குழந்தையின் வலது கை முழுவதுமாக அகற்றப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சுமார் ஒரு மாதம் சிகிச்சை பெற்று வந்த குழந்தை நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இந்த விடியா அரசின் அலட்சியத்தால் கை அகற்றப்பட்ட குழந்தை தற்போது உயிரிழந்துவிட்ட செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன், அன்புக் குழந்தையை இழந்து வாடும் பெற்றோர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையையும் தெரிவித்துக் கொள்கிறேன்,இந்த துயர நிகழ்விற்கு என் கடுமையான கண்டனங்கள்

 

அலட்சியம், அக்கறையின்மை

மேலும் குழந்தையை இழந்து வாடும் குடும்பத்திற்கு உரிய நிவாரணமும், அக்குடும்பத்தை சார்ந்த  ஒருவருக்கு அரசு வேலைவாய்பினையும் வழங்க வேண்டுமென வலியுறுத்ததுகிறேன். அலட்சியம் அக்கறையின்மைக்கு உதாரணமாக இருக்கும் இந்த விடியா ஆட்சியில் பச்சிளம் குழந்தைக்கு கூட பாதுகாப்பு இல்லை என்பதையும், மக்களை காக்கும் கடமையில் இருந்து இந்த அரசு ஒவ்வொரு நாளும் தவறிச் செல்வதையும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிருபணம் செய்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

வலது கை அகற்றப்பட்ட குழந்தை திடீர் மரணம் அடைந்தது ஏன்.? எழும்பூர் மருத்துவமனை டீன் விளக்கம்
 

Follow Us:
Download App:
  • android
  • ios