சந்திரயான்-3 விண்கலம் சந்திரனின் சுற்றுவட்டப் பாதையில் சனிக்கிழமை நுழைந்த பிறகு, மேடு பள்ளங்கள் நிறைந்த நிலவின் மேற்பரப்பை முதல் முறையாகப் படம் பிடித்துள்ளது.

இந்தியாவின் மூன்றாவது நிலவுப் பயணமான சந்திரயான்-3 மூலம் பதிவு செய்யப்பட்ட சந்திரனின் மேல்பரப்பைக் காட்டும் முதல் படங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வெளியிட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

சந்திரயான்-3 விண்கலம் சந்திரனின் சுற்றுவட்டப் பாதையில் சனிக்கிழமை நுழைந்த பிறகு, மேடு பள்ளங்கள் நிறைந்த நிலவின் மேற்பரப்பை முதல் முறையாகப் படம் பிடித்துள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள இஸ்ரோ சந்திரயான்-3 எடுத்த வீடியோவையும் வெளியிட்டுள்ளது.

"ஆகஸ்ட் 5, 2023 அன்று நிலவின் சுற்றுப்பாதைக்குள் சென்ற பின்பு (LOI) சந்திரயான்-3 விண்கலம் நிலவைப் படம்பிடித்துள்ளது" என்று இஸ்ரோவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்யப்பட்டுள்ளது.

6.4 லட்சம் கிராமங்களுக்கு ஹை-ஸ்பீடு இன்டர்நெட் வசதி! பாரத்நெட் திட்டத்துக்கு ரூ.1.39 லட்சம் கோடி ஒதுக்கீடு

Scroll to load tweet…
Scroll to load tweet…

நிலவு பயணம் இதுவரை சீராக உள்ளது. விக்ரம் லேண்டர் இந்த மாத இறுதியில் ஆகஸ்ட் 23 அன்று நிலவின் மேற்பரப்பில் மென்மையாகத் தரையிறங்கும் என்று இஸ்ரோ எதிர்பார்க்கிறது.

சந்திரயான்-3, இதுவரை எந்த நாடும் செல்லாத நிலவின் தென் துருவத்திற்குச் செல்லும் சிக்கலான 41 நாள் பயணத்தை மேற்கொண்டிருக்கிறது. விண்ணில் ஏவப்பட்ட 22 நாட்களுக்குப் பிறகு, சனிக்கிழமை நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது.

நிலவில் தடம் பதிக்கும் இஸ்ரோவின் கனவுத் திட்டமான சந்திரயான்-3 பயணத்திற்காக ரூ.600 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5ஆம் தேதி சந்திரயான்-3 நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்தது இந்தப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.

இஸ்ரோ முதல் கோவிட்-19 வரை! சுதந்திர இந்தியாவின் வியக்க வைக்கும் அறிவியல் தொழில்நுட்ப சாதனைகள்