Tomato Price Today : தக்காளி இன்று ஒரு கிலோ என்ன விலை.? கோயம்பேட்டில் விலை கூடியதா.? குறைந்ததா.?
தக்காளி விலை நாள் தோறும் உச்சத்தை தொட்டு வந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக தக்காளி வரத்து அதிகரித்த காரணத்தால் ஒரு கிலோ தாக்காளி 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே நேரத்தில் வாகனத்தில் கொண்டு வந்து தெரு தெருவாக விற்கப்படும் தக்காளியானது ஒரு கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உச்சத்தை தொட்ட தக்காளி விலை
தக்காளி விலையானது கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ 10 ரூபாய்க்கும் குறைவான விலைக்கு தக்காளி விற்பனையானதால் தக்காளியை விவசாயிகள் கீழே கொட்டும் நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் தக்காளி உற்பத்தி செய்வதை தவிர்த்து விட்டு மாற்று பயிருக்கு மாற தொடங்கினர். இதன் காரணமாக பல இடங்களில் தக்காளி உற்பத்தி குறைய தொடங்கியதால் விலையானது அதிகரிக்க தொடங்கியது. இதனால் 10 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி 50 ரூபாயை தொட்டு 100 ரூபாயை கடந்து 200 ரூபாய் என்ற நிலையை எட்டியது.
தக்காளி சட்னிக்கு தடை
தக்காளி விலை உயர்வு காரணமாக கிலோ கணக்கில் தக்காளி வாங்கிய நிலை மாறி எண்ணிக்கையில் தக்காளி வாங்கும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டனர். மேலும் வீடுகளில் தக்காளி சாராத உணவு வகைகளையும் சமைக்க தொடங்கினர். ஓட்டல்களில் தக்காளி சட்னி, தக்காளி சாதம், தக்காளி தொக்கு போன்ற உணவுகள் தயாரிப்பது முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து தமிழக அரசு சார்பாக தக்காளி விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் படி தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடைகளில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இருந்த போதும் இந்த திட்டம் முழுமையாக பொதுமக்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் தக்காளியை கூடுதல் விலைக்கு வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
வரத்து குறைந்த தக்காளி
கோயம்பேடு மார்க்கெட்டில் தினந்தோறும் 1100 டன் தக்காளி வந்த நிலையில், தற்போது 300 டன் தக்காளி மட்டுமே வந்ததால் தக்காளி விலை அதிகரித்ததாக வியாபாரிகள் தெரிவித்துள்ளன். மேலும் ஆந்திரா, கர்நாடக மாநில விவசாயிகள் தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் மாற்று பயிர் செய்ய தொடங்கியதால் தக்காளி உற்பத்தி குறைந்ததாக கூறுகின்றனர். இந்த நிலையில் தக்காளி வரத்து கடந்த சில நாட்களாக அதிகரித்ததாக விலையானது குறைய தொடங்கியது.
தக்காளி விலை குறைய காரணம் என்ன.?
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு 150 விற்பனை செய்யப்பட்ட தக்காளி நேற்று முன் தினம் 120 ரூபாய்க்கும், நேற்றும் இன்றும் 100 ருபாய் என்ற அளவில் தக்காளி விற்பனையாகிறது. சில்லரை வர்த்தகத்தில் 120 முதல் 130 வரை ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி வரத்து வரும் நாட்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் தக்காளி விலை குறையலாம் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் சென்னையில் தெரு தெருவாக வாகனங்களில் விற்கப்படும் தக்காளியானது ஒரு கிலோ 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்
Power Shutdown in Chennai: வாரத்தின் முதல் நாளில் இத்தனை இடங்களில் மின் தடையா.! வெளியான பட்டியல்