மார்பக புற்றுநோய்... சிகிச்சைக்கு பணமின்றி தவித்த நடிகை அங்காடித் தெரு சிந்து காலமானார்

மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகை அங்காடித் தெரு சிந்து இன்று காலமானார். அவருக்கு வயது 44.

Actress Angadi Theru Sindhu Passed away

வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான அங்காடித் தெரு படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் சிந்து. பல்வேறு சீரியல்களிலும் நடித்து வந்த இவருக்கு கடந்த 2020ம் ஆண்டு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அதற்காக சிகிச்சை எடுக்கத் தொடங்கிய சிந்துவுக்கு பாதிப்பு அதிகமானதால், ஒரு பக்க மார்பகத்தை அகற்றினர். பின்னர் தொடர்ந்து சிகிச்சை எடுத்தும் நடிகை சிந்துவால் கேன்சர் பாதிப்பில் இருந்து மீள முடியவில்லை.

தன்னுடைய வருமானத்தை நம்பி தான் குடும்பத்தை நடத்தி வந்த சிந்து கேன்சர் பாதிப்புக்கு பின்னர் படப்பிடிப்புக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் நிதி நெருக்கடியையும் சந்தித்து வந்தார். இதையடுத்து தனக்கு சிகிச்சைக்கு உதவி கோரி யூடியூப் சேனல்களுக்கு நடிகை சிந்து பேட்டியும் அளித்திருந்தார். இதன்பின்னர் அவருக்கு சில நடிகர்கள் உதவிக்கரம் நீட்டி வந்தனர்.

இதையும் படியுங்கள்... ஆஸ்கர் வென்ற Elephant Whisperers.. இயக்குனரிடம் நல்லெண்ண அடிப்டையில் 2 கோடி கேட்டு நோட்டீஸ் - பொம்மன் - பெள்ளி

Actress Angadi Theru Sindhu Passed away

அண்மையில் புற்றுநோய் பாதிப்பு மற்றொரு மார்பகத்திற்கும் பரவியதால், அதையும் அகற்றிவிட்டனர். அதன்பின்னர் நடிகை சிந்துவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது சிகிச்சை பெறும் வீடியோவை அவரது மகள் இணையத்தில் பதிவிட்டு அம்மாவுக்காக வேண்டிக்கொள்ளுமாறு ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்திருந்தார்.

இந்த நிலையில், இன்று அதிகாலை 2.15 மணியளவில் நடிகை சிந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 44. அவரின் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நடிகை அங்காடி தெரு சிந்துவின் மறைவுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இதையும் படியுங்கள்... வாரிசு பட ஷூட்டிங்.. சூப்பர் ஸ்டார் பற்றி கேட்டறிந்த தளபதி விஜய் - பல உண்மைகளை உடைத்த பிரபலம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios