வாரிசு பட ஷூட்டிங்.. சூப்பர் ஸ்டார் பற்றி கேட்டறிந்த தளபதி விஜய் - பல உண்மைகளை உடைத்த பிரபலம்!
தளபதி விஜய் அவர்களுடைய ரசிகர்கள் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடைய ரசிகர்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய வன்மம் தொடர்ச்சியாக எழுந்து வருகிறது என்றுதான் கூற வேண்டும்.
வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில், சரத்குமார் தளபதி விஜய் அவர்கள் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறியதும். ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறிய, காக்கை மற்றும் கழுகு கதையில், காக்கை என்று அவர் குறிப்பிட்டது தளபதி விஜய் அவர்களை தான் என்று கூறி இரு நடிகர்களுடைய ரசிகர்களும் பெரும் வாக்குவாதம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தளபதி விஜய் அவர்கள், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீது வைத்துள்ள அபிமானம் குறித்து மனம் திறந்து உள்ளார் ஜெயிலர் திரைப்படத்தின் ஆர்ட் டிராக்டர் கிரண். சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில் இது குறித்து அவர் பேசியுள்ளார்.
தளபதி விஜய் தான் நெல்சனை சீக்கிரமாக ஜெயிலர் படத்தின் முதல் நாள் சூட்டிங் செல்ல வலியுறுத்தி போன் செய்ததாக கூறிய அவர், ஒரு தெலுங்கு பட படபிடிப்புக்கு சென்றபொழுது, அங்கு வாரிசு பட படப்பிடிப்பில் இருந்த் நடிகர் விஜய் அவர்களை சந்தித்ததாக கூறியுள்ளார்.
அப்பொழுது அவரை அழைத்து பேசிய தளபதி விஜய், தலைவர் எப்படி இருக்காரு? நல்லா இருக்காருல்ல? ஆக்டிவா இருக்காருல்ல? என்று கேட்டறிந்ததாகவும் கிரண் கூறியுள்ளார். "நெல்சன் எல்லாரையும் கட்டி போட்டுடுவான்யா, அவன் ஏதோ ஒன்னு பண்றான்யா என்று நெல்சலையும் பாராட்டியதாகவும் கிரண் கூறியுள்ளார்.