Published : Jul 04, 2023, 07:09 AM ISTUpdated : Jul 05, 2023, 12:33 AM IST

Tamil News Live Updates: கோவையில் தனியார் கல்லூரி காம்பவுண்ட் சுவர் இடிந்து 4 பேர் பலி

சுருக்கம்

கோவை சுகுணாபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியின் காம்பவுண்ட் சுவர் கட்டுமான பணியின் போது சுவர் விழுந்து 4 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tamil News Live Updates:   கோவையில் தனியார் கல்லூரி காம்பவுண்ட் சுவர் இடிந்து 4 பேர் பலி

12:33 AM (IST) Jul 05

iQOO Neo 7 Pro: ஐக்யூ நியோ 7 ப்ரோ 5ஜி ஏன் வாங்க வேண்டும்?

ஐக்கூ மொபைல் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேமிங் சிறப்பம்சங்களுடன் கூடிய iQOO Neo 7 Pro 5G ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது.

11:56 PM (IST) Jul 04

மின்வேலிகள் அமைக்கும் முன்பு இதை பெறுவது கட்டாயம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு

மின்வேலிகள் அமைப்பதற்கு முன் அனுமதி பெறுவது கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

11:31 PM (IST) Jul 04

ட்விட்டருக்குப் போட்டியாக 'த்ரெட்ஸ்'.. களத்தில் இறங்கிய இன்ஸ்டாகிராம் - ரிலீஸ் தேதி குறித்த மெட்டா !

ட்விட்டருக்குப் போட்டியாக த்ரெட்ஸ் என்ற செயலியை உருவாக்கி வருகிறது இன்ஸ்டாகிராம். இந்த ஆப் எப்போது வெளியாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

10:46 PM (IST) Jul 04

பனிமய மாதா ஆலய தங்கத்தேர் திருவிழா.. சென்னை - தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில் - முழு விபரம்

தூத்துக்குடி பனிமய மாதா கோயில் தங்கத் தேர் திருவிழாவை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக சென்னை - தூத்துக்குடி இடையே சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்து உள்ளது.

10:19 PM (IST) Jul 04

இனிமே எல்லாம் இப்படித்தான்.. வேற மாறி..! அதிரடி உத்தரவை போட்ட டிஜிபி சங்கர் ஜிவால்

விடுமுறை நாட்கள் தவிர்த்து, அனைத்து நாட்களிலும் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கலாம் என்று டிஜிபி சங்கர் ஜிவால் அறிவித்துள்ளார்.

08:36 PM (IST) Jul 04

பழங்குடியின நபர் மீது சிறுநீர் கழித்த பாஜக தலைவர்.. பதறவைக்கும் சம்பவம் - காவல்துறை வழக்குப்பதிவு

பழங்குடியின நபர் மீது பாஜக எம்.எல்.ஏவின் பிரதிநிதி ஒருவர் சிறுநீர் கழித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

08:09 PM (IST) Jul 04

குடையை மறந்துடாதீங்க.! தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழை கொட்டப்போகுது - முழு விபரம்

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

07:41 PM (IST) Jul 04

ADAS முதல் மைலேஜ் வரை.. இந்தியாவில் அறிமுகமான கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் - சிறப்புகள் என்ன?

கியா நிறுவனத்தின் செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் (Kia Seltos facelift) கார் இன்று (ஜூலை 4-ஆம் தேதி) இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

07:33 PM (IST) Jul 04

கோவையில் தனியார் கல்லூரி காம்பவுண்ட் சுவர் இடிந்து 4 பேர் பலி

கோவையில் அருகே உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து 4 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.

06:48 PM (IST) Jul 04

4 மாநிலங்கள்.. 5 நகரங்கள்.. 50 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

நான்கு மாநிலங்களின் 5 நகரங்களுக்கு பிரதமர் மோடி 50 ஆயிரம் கோடி மதிப்பிலான 50 திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

05:54 PM (IST) Jul 04

Instagram-ன் 5 சீக்ரெட் அம்சங்கள் தெரியுமா.? தெரிஞ்சா அசந்துடுவீங்க

இன்ஸ்டாகிராம் பயன்படுத்துபவர்களுக்கு தெரியாத 5 முக்கிய அம்சங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.

05:05 PM (IST) Jul 04

"அள்ள அள்ள குறையா அமுதசுரபி துலுக்கர்பட்டி!" அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் கலெக்டர் வரை பெருமிதம்

திருநெல்வேலி மாவட்டம் அருகே உள்ள துலுக்கர்பட்டியில் நடந்து வரும் அகழாய்வுப் பணிகளின் போது தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மண்பானை ஓடுகள் கிடைத்துள்ளன.

04:06 PM (IST) Jul 04

பாஜக புதிய மாநில தலைவர்கள் நியமனம்

தெலங்கானா, ஆந்திரா, ஜார்க்கண்ட், பஞ்சாப் மாநிலங்களுக்கு பாஜக தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தெலங்கானா பாஜக தலைவராக கிஷண் ரெட்டி நியமனம், ஆந்திர பாஜக தலைவராக புரந்தேஸ்வரியும் நியமனம் செய்து பாஜக தேசிய தலைவர் நட்டா உத்தரவு அளித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத் தலைவராக முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டியும், பஞ்சாப் மாநிலத் தலைவராக சுனில் ஜாக்கரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

03:38 PM (IST) Jul 04

ஷாக் நியூஸ்.. கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு.. இந்த முறை எவ்வளவு தெரியுமா?

பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலையை மீண்டும் உயர்த்தி உள்ளன.

01:54 PM (IST) Jul 04

தமிழகத்தை தாண்டி தேர்தலில் போட்டியிடவே முடியாத திமுகவை கண்டு பாஜகவுக்கு பயமா? பங்கம் செய்யும் வானதி சீனிவாசன்

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெற்று ஹாட்ரிக் சாதனை படைக்கப் போவதை யாராலும் தடுக்க முடியாது என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

 

 

12:15 PM (IST) Jul 04

அதெல்லாம் ஏத்துக்கவே முடியாது! செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதிகளின் மாறுப்பட்ட தீர்ப்பின் விவரம்..!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவின் மீது நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதை அடுத்து ஆட்கொணர்வு வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

 

 

11:19 AM (IST) Jul 04

BREAKING: அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் திடீர் ட்விஸ்ட்... சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

சட்டவிரோத பணப்பறிமாற்ற தடைச்சட்ட வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், அவர் சட்டவிரோத காவலில் இருப்பதாக அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இரு நீதிபதிகள் மாறுப்பட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். 

 

 

11:19 AM (IST) Jul 04

தவறான சிகிச்சையால் குழந்தையின் கை அகற்றம்! யார் தப்பு செய்தாலும் சும்மா விடாதீங்க! கொதிக்கும் டிடிவி..!

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் ராமநாதபுரத்தை சேர்ந்த ஒன்றரை வயது குழந்தையின் வலது கை அகற்றப்பட்ட செய்தி அதிர்ச்சியளிக்கிறது என டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.

 

 

11:14 AM (IST) Jul 04

விதிமீறல்கள் இருக்கிறதா?

செந்தில் பாலாஜிக்கு போலீஸ் காவல் கொடுக்கவே முடியாது. கைது நடவடிக்கையில் விதிமீறல்கள் இருக்கிறது என ஒரு நீதிபதி ஒப்புதல்: திமுக வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ 
 

11:13 AM (IST) Jul 04

காவேரியில் சிகிச்சை தொடரலாம்

காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை தொடரலாம். மருத்துவர்கள் ஒப்புதல் அளிக்கும் வரை செந்தில் பாலாஜி சிகிச்சையில் இருக்கலாம் என நீதிபதி தீர்ப்பு 

11:13 AM (IST) Jul 04

சட்ட விரோத கைதாக இருந்தால் விடுவிக்கலாம்

செந்தில் பாலாஜி மனைவி கொண்டு வந்த ஆட்கொணர்வு மனு ஏற்கத்தக்கது, சட்ட விரோத கைதாக இருந்தால் செந்தில் பாலாஜியை விடுவிக்கலாம் - நீதிபதி நிஷா பானு 

11:13 AM (IST) Jul 04

செந்தில் பாலாஜிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை

இன்று முதல் பத்து நாட்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம். அதற்கு மேல் சிகிச்சை தேவைப்பட்டால் அரசு மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் - நீதிபதி பரத சக்ரவர்த்தி 

10:51 AM (IST) Jul 04

சென்னை மெட்ரோ ரயில்: வரப்போகும் சூப்பர் வசதி!

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்தில் 15 ரயில் நிலையங்களில் வழித்தடம் மாறும் வசதி அமைக்கப்பட உள்ளது

10:51 AM (IST) Jul 04

மகாராஷ்டிராவுக்கு அடுத்து பீகாரா? ஹிண்ட் கொடுத்த பாஜக!

பீகாரில் ஐக்கிய ஜனதாதள கட்சியை சேர்ந்த பலர் நிதிஷ்குமார் மீது அதிருப்தியில் இருப்பதாக அம்மாநில பாஜக மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி தெரிவித்துள்ளார்

10:04 AM (IST) Jul 04

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின் புது கார் வாங்கிய நடிகர் முத்துக்குமார்... அதன் விலை இத்தனை லட்சமா?

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு கலக்கிய நடிகர் முத்துக்குமார் புது கார் ஒன்றை வாங்கி உள்ளார்.

08:51 AM (IST) Jul 04

சான் பிரான்சிஸ்கோவில் இந்தியத் தூதரகம் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய துணை தூதரகத்திற்கு காலிஸ்தான் ஆதரவாளர்கள் தீ வைத்து வைக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. இதனை அமெரிக்கா கடுமையாக கண்டிப்பதாகவும் இது ஒரு கிரிமினல் குற்றம் என்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறியுள்ளார்.

08:42 AM (IST) Jul 04

ச்ச என்ன மனுஷன்யா... பிறந்தநாளில் முதியோர் இல்லத்துக்கு ஆம்புலன்ஸ் கிஃப்ட் ஆக கொடுத்த பாலா - குவியும் வாழ்த்து

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் பாலா, முதியோர் இல்லத்திற்கு சொந்த செலவில் ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்து உதவி உள்ளார்.

08:06 AM (IST) Jul 04

மதிமுக மாவட்ட செயலாளரின் பதவி பறிப்புக்கு இதுதான் காரணமா? அடுத்து அவர் சேரப்போகும் கட்சி இதுதான்.!

மதிமுகவின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் மார்கோனி அக்கட்சியில் இருந்து அதிரடி நீக்கப்படுவதாக வைகோ அறிவித்த நிலையில் அதற்கான காரணம் வெளியாகியுள்ளது. 

 

 

07:12 AM (IST) Jul 04

TN Police Mobile Ban: பணியில் இருக்கும்போது காவலர்கள் செல்போன் பயன்படுத்த தடை.. சென்னை கமிஷ்னர் அதிரடி..!

பணி  நேரத்தில் இருக்கும் காவலர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

 

07:11 AM (IST) Jul 04

Power Shutdown in Chennai: அடேங்கப்பா! இன்று சென்னையில் இவ்வளவு இடங்களில் மின்தடை? எங்கெல்லாம் தெரியுமா?

சென்னையில் மின் தடை: மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கே.கே.நகர், கிண்டி உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.


 

 

07:10 AM (IST) Jul 04

சென்னையில் 409வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னையில் 409வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் - ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


More Trending News