அதெல்லாம் ஏத்துக்கவே முடியாது! செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதிகளின் மாறுப்பட்ட தீர்ப்பின் விவரம்..!
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் நடைபெற்று வந்தது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவின் மீது நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதை அடுத்து ஆட்கொணர்வு வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் நடைபெற்று வந்தது. செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் என்.ஆர். இளங்கோ, முகுல் ரோஹத்கி ஆகியோர் வாதிட்டனர். அவர்கள் தங்களது வாதத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சட்ட விரோதமானது எனவும் செந்தில் பாலஜியை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை உள்ளிட்ட வாதங்களை முன்வைத்தனர்.
இதையும் படிங்க;- BREAKING: அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் திடீர் ட்விஸ்ட்... சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!
அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் உள்ள நாட்களை நீதிமன்ற காவல் நாட்களாக எடுத்து கொள்ளக்கூடாது. இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல உள்ளிட்ட வாதங்களை முன்வைத்தார். இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் கடந்த 27ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு இந்த வழக்கில் நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வு தீர்ப்பளித்துள்ளது. இதில், இரு நீதிபதிகள் மாறுப்பட்ட தீர்ப்பை வழங்கியதை அடுத்து தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
நீதிபதி ஜெ. நிஷா பானு தீர்ப்பு
மேலகாவின் ஆட்கொணர்வு மனு விசாரணக்கு உகந்ததே. ஆகையால் ஆட்கொணர்வு ஏற்கப்படுகிறது. செந்தில்பாலாஜியை உடனடியாக விடுவிக்கலாம். நீதிமன்ற காவலில் வைத்தது சட்டவிரோதம் என்பதால் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க முடியாது என்றார்.
இதையும் படிங்க;- செந்தில் பாலாஜியை மீண்டும் நெருங்கும் வருமானவரித்துறை..! 3வது முறையாக சகோதரர் அசோக்குமாருக்கு சம்மன்
நீதிபதி பரத சக்ரவர்த்தி தீர்ப்பு
ஆட்கொணர்வு மனுவில் நீதிபதி நிஷாபானு கருத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டப் பிறகு இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல. செந்தில்பாலாஜியை சிறையில் அடைத்த உத்தரவு சட்டவிரோதம் என கூறமுடியாது. அதனால் மேகலாவின் ஆட்கொணர்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
நீதிமன்ற காவலிலேயே காவிரி மருத்துவமனையில் சிகிச்சையை தொடரலாம். உடல்நிலை சரியாகும் வரையிலோ அல்லது மேலும் 10 நாட்களுக்கோ காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வரை சிகிச்சை தொடரலாம். அதன் பின்னர் சிகிச்சை தேவைப்பட்டால் சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையை தொடரலாம். சிகிச்சையில் இருக்கும் நாட்களை நீதிமன்ற காவலில் இருக்கும் நாட்களாக எடுத்துக் கொள்ள முடியாது என கூறியுள்ளார்.