சட்டவிரோத பணப்பறிமாற்ற தடைச்சட்ட வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், அவர் சட்டவிரோத காவலில் இருப்பதாக அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

சட்டவிரோத பணப்பறிமாற்ற தடைச்சட்ட வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், அவர் சட்டவிரோத காவலில் இருப்பதாக அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இரு நீதிபதிகள் மாறுப்பட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 13-ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்ய பரிந்துரைத்தார். இதனையடுத்து, உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி சென்னை காவேரி தனியார் மருத்துவமனையில் பை பாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார். மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் அவரது நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;- குழந்தை விவகாரம்: இதனால்தான் செந்தில் பாலாஜி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாரா? விஜயகாந்த் கேள்வி !!

இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்ட விரோதமானது என்றும், சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது, அமலாக்கத்துறை தரப்பில் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. சட்டப்படி கைது செய்யப்பட்டதாகவும், மருத்துவமனையில் இருக்கும் நாட்களை நீதிமன்ற காவலாக கருதக்கூடாது என்று வாதிட்டனர். செந்தில் பாலாஜி ததரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட போது அமலாக்கத்துறை சட்டவிதிகளை பின்பற்றவில்லை. ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது என்று பல்வேறு உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மேற்கொள் காட்டினார். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாங்களும் கடந்த மாதம் 27ம் தேதி நிறைவடைந்ததையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. 

இதையும் படிங்க;- சூடுபிடித்த அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு: 300 ஊழியர்களுக்கு குறி.! மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிரடி

இந்நிலையில், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில், அமலாக்கத்துறையின் கைது சட்டவிரோதம் எனவும், உடனடியாக விடுவிக்க நீதிபதி நிஷா பானு தீர்ப்பு வழங்கினார்.ஆனால், மற்றொரு நீதிபதி பரத சக்கரவத்தி ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும், நீதிமன்ற காவல் சட்டவிரோதமில்லை என்று கூறி தள்ளுபடி செய்தார். மேலும், காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜி சிகிச்சை தொடரலாம். மருத்துவர்கள் ஒப்புதல் அளிக்கும் வரை செந்தில் பாலாஜி சிகிச்சையில் இருக்கலாம் என கூறியிருந்தார். இதனையடுத்து, இந்த வழக்கு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.