Asianet News TamilAsianet News Tamil

செந்தில் பாலாஜியை மீண்டும் நெருங்கும் வருமானவரித்துறை..! 3வது முறையாக சகோதரர் அசோக்குமாருக்கு சம்மன்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் வருமான வரித்துறையினர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமாருக்கு நேரில் ஆஜராகும் படி 2 முறை சம்மன் அனுப்பிய நிலையில், தற்போது 3வது முறையாக வருகிற 27 ஆம் தேதி நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.  

Senthil Balaji brother has been summoned to appear in person in connection with the Income Tax case
Author
First Published Jul 2, 2023, 1:48 PM IST | Last Updated Jul 2, 2023, 1:51 PM IST

செந்தில் பாலாஜி உறவினர் வீட்டில் ரெய்டு

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகாரிலும், உரிய வகையில் வரி செலுத்தாக காரணத்தாலும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் நண்பர்கள் என 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை கடந்த மாதம் சோதனை நடத்தியது.  சுமார் எட்டு நாட்களுக்கு நடைபெற்ற இந்த சோதனையில் பல இடங்களில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீட்டில் நடைபெற்ற சோதனையிலும் கணக்கில் வராத ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. அப்போது கரூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் சோதனை செய்த வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரு சில இடங்களில் சீல் வைத்தனர். இதனையடுத்து அந்த பகுதிகளில் கடந்த வாரம் அதிகாரிகள் மீண்டும் சோதனையில் நடத்தி இருந்தனர்.

Senthil Balaji brother has been summoned to appear in person in connection with the Income Tax case

செந்தில் பாலாஜி கைது

இந்த பரபரப்பு முடிவடைவதற்குள் அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்து செந்தில் பாலஜி மோசடி செய்ததாக கூறி அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடத்தி அவரை கைது செய்தனர். அப்போது அவருக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்யப்பட்டதில் இருதய பகுதியில் 3 அடைப்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து தனியார் மருத்துவமனையான காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை நீதிமன்ற காவல் இருக்கும் செந்தில் பாலாஜியை அமலாக்க துறையில் விசாரணை நடத்த முடியாமல் திணறி வருகிறது. இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

Senthil Balaji brother has been summoned to appear in person in connection with the Income Tax case

அசோக்குமாருக்கு ஐ.டி மீண்டும் சம்மன்

இந்த பரபரப்புக்கு மத்தியில் செந்தில்பாலாஜிக்கு மீண்டும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமாருக்கு ஏற்கனவே இரண்டு முறை வருமானவரித்துறையினர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் வருமானவரித்துறை அதிகாரியின் முன்பாக அசோக்குமார் ஆஜராகாமல் கூடுதல் கால அவகாசம் கேட்டிருந்தார்.  இந்த நிலையில் தற்போது வருகின்ற 27ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு வருமானவரித்துறை மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது. இந்த சம்மனுக்கு பதில் அளிக்கும் வகையில் அசோக்குமார் ஆஜராகாத பட்சத்தில் நீதிமன்றத்தை நாட வருமானவரித்துறை முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்

பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி சூர்யாவுக்கு மீண்டும் செக் வைக்கும் போலீஸ்.! நேரில் ஆஜராக அதிரடி உத்தரவு.?
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios