Power Shutdown in Chennai: அடேங்கப்பா! இன்று சென்னையில் இவ்வளவு இடங்களில் மின்தடை? எங்கெல்லாம் தெரியுமா?
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கே.கே.நகர், கிண்டி உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
power cut
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
கே.கே.நகர்:
பீமாஸ் ஹோட்டல், ராஜன் சாலை, மெஜஸ்டிக் அபார்ட்மெண்ட், அருணாச்சலம் மெயின் ரோடு ஒரு பகுதி, சுப்ரமணி தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
கிண்டி:
லேபர் காலனி, நாகிரெட்டி தோட்டம் ராஜ்பவன் வண்டிக்காரன் தெரு, ரங்கநாதன் தெரு, நேரு நகர், ராமபுரம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, செந்தமிழ் நகர், அன்னை சத்யா நகர் மெயின் ரோடு மணப்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் நகர், ஐபிஎஸ் காலனி மூவரசன்பேட்டை மணிகண்டன் தெரு, மேடவாக்கம் மெயின் ரோடு மடிபாக்கம் ஷீலா நகர், அன்னை தெரசா நகர் புழுதிவாக்கம் சீனிவாசன் கோயில் தெரு, கோபிநாதன் தெரு, வேம்புலி அம்மன் கோயில் தெரு, நங்கநல்லூர் எம்.ஜி.ஆர் ரோடு, என்.ஜி.ஓ காலனி, ஆசிரியர் காலனி ஒரு பகுதி டி.ஜி.நகர் துரைசாமி தெரு, வாணுவம்பேட்டை சாந்தி நகர், மகாலட்சுமி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
பொன்னேரி :
தேர்வோய் கண்டிகை கரடிபுதூர், சின்ன புலியூர், என்.எம்.கண்டிகை மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.