அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய துணை தூதரகத்திற்கு காலிஸ்தான் ஆதரவாளர்கள் தீ வைத்து வைக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணை தூதரகத்தை காலிஸ்தான் ஆதரவு ஆதரவாளர்கள் தீ வைக்க முயன்றுள்ளனர். இதனை அமெரிக்கா கடுமையாக கண்டிப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட மேத்யூ மில்லர், இது ஒரு கிரிமினல் குற்றம் என்று கண்டனம் தெரிவித்துள்ளார். “சனிக்கிழமை சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தைத் தாக்கி தீவைக்க முயற்சி செய்ததை அமெரிக்கா வன்மையாகக் கண்டிக்கிறது. அமெரிக்காவில் உள்ள தூதரக வசதிகள் மற்றும் தூதரக அதிகாரிகளுக்கு எதிரான வன்முறை கிரிமினல் குற்றமாகும்" என்று அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சிங்கப்பூரில் முதாவது ஹைட்டரஜன் எரிபொருள் கொண்ட வாகனத்தின் சோதனை ஓட்டம்!

அமெரிக்காவில் உள்ள உள்ளூர் செய்தி சேனலில் ஜூலை 2ஆம் தேதி, சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணை தூதரகத்திற்கு காலிஸ்தான் ஆதரவாளர்கள் தீ வைத்து வைக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டது.

Scroll to load tweet…

ஜூலை 2ஆம் தேதி அதிகாலை 1:30 மணி முதல் 2:30 மணிக்குள் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.சான்பிரான்சிஸ்கோ தீயணைப்புத் துறையினர் தீயை விரைவாக அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதில் தூதரக ஊழியர்கள் யாரும் காயமடையவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தரன்ஜித் சிங் சந்து மற்றும் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரக ஜெனரல் டாக்டர் டி.வி. நாகேந்திர பிரசாத் ஆகியோரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவருமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் அவர்களுக்குப் பங்கு இருப்பதாகக் காலிஸ்தான் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் 19ஆம் தேதியும் சான் பிரான்சிஸ்கோ இந்தியத் தூதரகம் காலிஸ்தான் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது. பிரிட்டனின் லண்டன் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தில் நடந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதற்கு அமெரிக்காவும் இந்தியாவும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.

பப்ஜி காதலனைத் தேடி 4 குழந்தைகளுடன் இந்தியா வந்த பாகிஸ்தான் பெண்!