ஷாக் நியூஸ்.. கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு.. இந்த முறை எவ்வளவு தெரியுமா?
பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலையை மீண்டும் உயர்த்தி உள்ளன.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கேற்ப பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை மாற்றி வருகின்றன. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் எல்பிஜி விலையை திருத்தி வருகின்றன. எனினும் கேஸ் சிலிண்டரின் விலை, உள்ளூர் வரிகளைப் பொறுத்து மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். அந்த வகையில் ஜூலை 1-ம் தேதி வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.8 உயர்த்தப்பட்டது.
1 கிலோ ரூ.20 லட்சம்! இந்த ‘ இமயமலை வயகரா’ பற்றி தெரியுமா? அப்படி என்ன ஸ்பெஷல்?
இந்த சூழலில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலையை மீண்டும் உயர்த்தி உள்ளன. அதன்படி, வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.7 உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், வீட்டு பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இந்த உயர்வுக்குப் பிறகு, மும்பையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.1,733.50ல் இருந்து ரூ.1,740.50 ஆக உயரும். சென்னையில் ரூ.1,945ல் இருந்து ரூ.1,952 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1,895ல் இருந்து ரூ.1,902 ஆகவும் உயரும்.
இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலை குறைக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த விலை உயர்த்தப்பட்டுள்ளது. மே மாதத்தில் வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை 172 ரூபாய் குறைத்த நிலையில், ஜூன் மாதம் 83 ரூபாய் குறைக்கப்பட்டது.
வர்த்தக சிலிண்டர்களின் விலை கடந்த ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி ரூ.91.50 குறைக்கப்பட்டது. ஆகஸ்ட் 1, 2022 அன்று, வணிக ரீதியான LPG சிலிண்டர்களின் விலையும் 36 ரூபாய் குறைக்கப்பட்டது. வீட்டு பயன்பாட்டிற்கு 14.20 கிலோ எடை கொண்ட சிலிண்டரும், வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர்கள் தொழில்துறை மற்றும் வணிகத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வளவு டிரை பண்ணாலும் பணத்தை சேமிக்க முடியலயா? அப்ப இந்த டிப்ஸ்-ஐ ஃபாலோ பண்ணுங்க..