இனிமே எல்லாம் இப்படித்தான்.. வேற மாறி..! அதிரடி உத்தரவை போட்ட டிஜிபி சங்கர் ஜிவால்
விடுமுறை நாட்கள் தவிர்த்து, அனைத்து நாட்களிலும் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கலாம் என்று டிஜிபி சங்கர் ஜிவால் அறிவித்துள்ளார்.

தமிழக டிஜிபியாக பணிபுரிந்த சைலேந்திரபாபு கடந்த ஜூன் 30ம் தேதி ஓய்வு பெற்ற நிலையில் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் பணி நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள காவல் கமிஷனர்கள், மண்டல ஐஜிக்கள், சரக டிஐஜி களுக்கு, எஸ்பிகளுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.
இன்ஸ்பெக்டர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் இரவு பணிகளை கவனிக்க வேண்டும். ரவுடி பட்டியலில் உள்ளவர்கள் ஜாமினில் வெளியே வந்தால் அவர்களை கைது செய்ய வேண்டும். அவர்களை கண்காணிக்க வேண்டும். உதவி கமிஷனராக உள்ளவர்கள் பகல் நேர பணியோடு நள்ளிரவு 2 மணி வரை பணிபுரிய வேண்டும். பகல் மற்றும் இரவு நேரங்களில் கண்டிப்பாக வாகன ரோந்து நடத்த வேண்டும்.
அப்போது குற்றப் பட்டியலில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும். குடிபோதையில் வாகனம் ஓட்டினால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். லாட்ஜ், ஹோட்டல்களில் சரியான சோதனை நடத்தி, சரியான முகவரியை கொடுத்து தங்கினார்களா ? என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்கு மேல் திறந்து இருக்க கூடாது.
காலையில் 12 மணிக்கு முன் திறக்க கூடாது. இதனை கண்காணிக்க வேண்டும் மீறினால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதேபோல காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், பொதுமக்கள் மற்றும் காவலர்களின் குறை தீர்க்கும் வகையிலான மனுக்களை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 11.30 மணியளவில் நேரில் பெற உள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தலைமையகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை.. விதிமுறைகள் என்னென்ன?
ரூம் எடுக்க அதிக செலவா.? குறைந்த விலையில் ஹோட்டல் வசதி! IRCTC திட்டம் தெரியுமா உங்களுக்கு?