குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின் புது கார் வாங்கிய நடிகர் முத்துக்குமார்... அதன் விலை இத்தனை லட்சமா?
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு கலக்கிய நடிகர் முத்துக்குமார் புது கார் ஒன்றை வாங்கி உள்ளார்.
Muthukumar
சினிமாவை விட சின்னத்திரை பிரபலங்களுக்கு மவுசு கூடிவிட்டது. சமீப காலமாக சின்னத்திரை பிரபலங்களின் அசுர வளர்ச்சியை பார்த்து பலரும் வியந்து போய் உள்ளனர். குக் வித் கோமாளி புகழ் முதல் மணிமேகலை வரை மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறி, பி.எம்.டபிள்யூ கார் வாங்கும் அளவுக்கு அவர்கள் உயர்ந்துள்ளதற்கு அவர்களின் கடின உழைப்பே காரணம்.
Muthukumar
அப்படி சினிமாவைக் காட்டிலும் சின்னத்திரை மூலம் புகழ் வெளிச்சத்தை பெற்றவர் தான் நடிகர் முத்துக்குமார். இவர் சினிமாவில் சார்பட்டா பரம்பரை, விக்ரமின் மகான் போன்ற படங்களில் வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார். இருப்பினும் அதற்கு பெரியளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை.
Muthukumar
இதையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கினார் முத்துக்குமார். அதுவும் சீசன் 3-ல் வைல்டு கார்டு போட்டியாளராக எண்ட்ரி கொடுத்த முத்துக்குமார், தன்னுடைய சமையல் திறமையால் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.
இதையும் படியுங்கள்... எப்படி இருந்த விடுதலை பட நாயகி இப்படி ஆகிட்டாங்களே... ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு டோட்டலாக மாறிய பவானி ஸ்ரீ
Muthukumar
ஆனால் இறுதிப் போட்டியில் வெற்றிவாய்ப்பை நழுவ விட்டாலும், அந்நிகழ்ச்சி மூலம் தனக்கு பெயரும், புகழும் கிடைத்தது மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்ததாக நெகிழ்ச்சியுடன் கூறினார். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின்னர் நடிகர் முத்துக்குமாருக்கு சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.
Muthukumar
இந்நிலையில், நடிகர் முத்துக்குமார் புதிதாக கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்று அவர் கார் வாங்கியபோது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. முத்துக்குமார் வாங்கி இருக்கும் இனோவா கிறிஸ்டா காரின் மதிப்பு ரூ.30 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... ச்ச என்ன மனுஷன்யா... பிறந்தநாளில் முதியோர் இல்லத்துக்கு ஆம்புலன்ஸ் கிஃப்ட் ஆக கொடுத்த பாலா - குவியும் வாழ்த்து