எப்படி இருந்த விடுதலை பட நாயகி இப்படி ஆகிட்டாங்களே... ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு டோட்டலாக மாறிய பவானி ஸ்ரீ
விடுதலை படத்தில் நாயகியாக நடித்த நடிகை பவானி ஸ்ரீ இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
Bhavani sre
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் உடன் பிறந்த தங்கையான பவானி ஸ்ரீ, சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இவர் கடந்த 2020-ம் ஆண்டு விருமாண்டி இயக்கத்தில் வெளிவந்த க/பெ ரணசிங்கம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
Bhavani sre
இதையடுத்து நடிகை பவானி ஸ்ரீக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் வெற்றிமாறனின் விடுதலை திரைப்படம். இப்படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்துள்ளார் பவானி ஸ்ரீ. ஹீரோயினாக அறிமுகமாகி உள்ள முதல் படத்திலேயே மிகவும் துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்த பவானி ஸ்ரீக்கு பாராட்டுக்களும் கிடைத்தன.
Bhavani sre
அடுத்ததாக தற்போது விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார் பவானி. இதுதவிர நண்பன் ஒருவன் வந்த பிறகு என்கிற படத்திலும் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இதையும் படியுங்கள்... ச்ச என்ன மனுஷன்யா... பிறந்தநாளில் முதியோர் இல்லத்துக்கு ஆம்புலன்ஸ் கிஃப்ட் ஆக கொடுத்த பாலா - குவியும் வாழ்த்து
Bhavani sre
பொதுவாகவே ஹீரோயின் ஆனதும் அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பிடிக்க நடிகைகள் கையாளும் யுக்தி போட்டோஷூட் தான். அதே பார்முலாவை நடிகை பவானி ஸ்ரீயும் பின்பற்றி வருகிறார். அதன்படி விதவிதமாக போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் பவானி.
Bhavani sre
அந்த வகையில், நடிகை பவானி ஸ்ரீ நடத்திய போட்டோஷூட்டை AI தொழில்நுட்பத்தில் மாற்றி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் பவானி ஸ்ரீ. அந்த போட்டோஷூட் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், விடுதலை பட நாயகியா என கேட்கும் அளவுக்கு ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு டோட்டலாக மாறிப்போய் உள்ளார். பவானி ஸ்ரீயின் AI புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... ஓபிஎஸ் கூட நிறைய நாள் இருந்திருக்கேன்... நடிகை ரேகா நாயர் அளித்த பேட்டி வைரல்