Published : Oct 03, 2023, 07:12 AM ISTUpdated : Oct 03, 2023, 10:10 PM IST

Tamil News Live Updates: நிர்மலா சீதாராமனுடன் அதிமுக எம்எல்ஏக்கள் சந்திப்பு

சுருக்கம்

கோவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அதிமுக எம்எல்ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அமுல் கந்தசாமி, வரதராஜ் ஜெயராமன் உள்ளிட்டோர் சந்தித்துள்ளனர். 

Tamil News Live Updates:  நிர்மலா சீதாராமனுடன் அதிமுக எம்எல்ஏக்கள் சந்திப்பு

10:10 PM (IST) Oct 03

தமிழ்நாட்டில் உள்ள இந்து கோயில்களை திமுக அரசு ஆக்கிரமித்துள்ளது.. திமுகவை வெளுத்து வாங்கிய பிரதமர் மோடி

தமிழ்நாட்டில் உள்ள இந்து கோயில்களை திமுக அரசு ஆக்கிரமித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பகிரங்கமாக குற்றம்சாட்டி பேசியுள்ளார். இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

09:46 PM (IST) Oct 03

மாதம் 1.5 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை.. இதை படிச்சிருந்தா மட்டும் போதும் - முழு விபரம் இதோ !!

வருமான வரித் துறையில் வேலைக்கான பொன்னான வாய்ப்பு, ரூ.1.5 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும். இதன் முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

08:42 PM (IST) Oct 03

செம்ம கியூட்... இரண்டாவது குழந்தை பிறந்த தகவலை புகைப்படத்துடன் கூறிய கணேஷ் வெங்கட்ராம்! குவியும் வாழ்த்து!

பிரபல நடிகரும் பிக்பாஸ் பிரபலமுமான, கணேஷ் வெங்கட்ராமின் மனைவியும், நடிகையுமான நிஷா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த நிலையில், தற்போது அவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்து தகவலை சமூக வலைதளத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். மேலும் படிக்க 

07:48 PM (IST) Oct 03

18 ஜிபி ரேம்.. பாஸ்ட் சார்ஜிங் வசதி வேற இருக்கு.. OnePlus 11R 5G விரைவில் அறிமுகம் - முழு விபரம் இதோ !!

ஒன் பிளஸ் (OnePlus 11R 5G) சோலார் ரெட் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் பிற முக்கிய அம்சங்கள் பற்றி பார்க்கலாம்.

07:12 PM (IST) Oct 03

அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்து அவதூறு கருத்து: ஆன்மீக பேச்சாளர் ஆர்பிவிஎஸ் மணியனுக்கு நிபந்தனை ஜாமீன்

விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவர்  ஆர்.பி.வி.எஸ். மணியனுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

05:55 PM (IST) Oct 03

கேசிஆர் தன்னை சந்தித்து என்டிஏ கூட்டணியில் சேர சொன்னார்.. பிரதமர் மோடி கிளப்பிய புது சர்ச்சை !!

ஜிஹெச்எம்சி தேர்தலுக்குப் பிறகு டெல்லி வந்து கேசிஆர் தன்னை சந்தித்து என்டிஏவில் சேருமாறு கூறியதாக பிரதமர் நரேந்திர மோடி பரபரப்பு கருத்துகளை தெரிவித்தார்.

05:26 PM (IST) Oct 03

அதிமுகவுடன் கூட்டணி என்றால் ராஜினாமா? பாஜக மேலிடத்திடம் அண்ணாமலை திட்டவட்டம்!

அதிமுகவுடன் கூட்டணி தொடர்ந்தால் தனது பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக பாஜக தலைமையிடம் அண்ணாமலை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

05:18 PM (IST) Oct 03

தீபாவளி சர்ப்ரைஸ்.. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. முழு விபரம் இதோ !!

8வது ஊதியக் குழு தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அரசு ஊழியர்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கி உள்ளது.

04:46 PM (IST) Oct 03

வளர்ச்சியடைந்த பாரதம் எப்போது சாத்தியம்? பிரதமர் மோடி விளக்கம்!

வளர்ச்சியடைந்த பாரதம் என்ற கனவு எப்போது நனவாகும் என்பது குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார்

04:23 PM (IST) Oct 03

உங்கள் வீட்டில் செல்வம் நிலைத்து நிற்க இந்த வாஸ்து வழிமுறைகளை கடைபிடியுங்கள்..!

பணத்திற்கான வாஸ்து பற்றி பல்வேறு சாஸ்திரங்கள் பல வழிமுறைகளை கூறுகிறது. வீட்டில் செல்வம் மற்றும் செழிப்பை ஈர்க்கும் முக்கிய குறிப்புகளை பார்க்கலாம்.

03:19 PM (IST) Oct 03

இன்னும் கொஞ்ச நாள் தான்.. மரணம் குறித்து அன்றே சொன்ன ஜோதிடர் - சாக்லேட்டால் உயிரை விட்ட பெண் - ஷாக் நியூஸ்

உலகத்தில் பல்வேறு நம்ப முடியாத சம்பவங்கள் நடப்பதுண்டு. அப்படிப்பட்ட சம்பவம் பிரேசிலில் நடைபெற்றுள்ளது.

02:52 PM (IST) Oct 03

இந்த வங்கிகளில் இனி பணம் எடுக்க முடியாது.. 8 வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்த ரிசர்வ் வங்கி..

இந்த 8 வங்கிகளும் நிரந்தரமாக மூடப்படுகிறது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்தது ஏன் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

01:53 PM (IST) Oct 03

தமிழ்நாட்டில் சாதிவாரிக் கணக்கெடுப்பு: பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் சாதிவாரிக் கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்

01:30 PM (IST) Oct 03

திமுக ஆட்சியில் தினசரி வாடிக்கையாகி விட்ட கொலை: அண்ணாமலை கடும் கண்டனம்!

திமுக ஆட்சியில் கொலை என்பது தினசரி வாடிக்கையாகி விட்டதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்

12:53 PM (IST) Oct 03

நியூஸ் க்ளிக் விவகாரம்: சீதாராம் யெச்சூரி இல்லத்தில் ரெய்டு!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி இல்லத்தில் டெல்லி சிறப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்

12:50 PM (IST) Oct 03

சமூகநீதியைக் காப்பதில் தடுமாறும் தமிழகம்.. சாதித்துக்காட்டிய பீகார் அரசு.. பாராட்டும் அன்புமணி ராமதாஸ்.!

மாநில அரசுக்கு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் உண்டு என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதை பயன்படுத்திக் கொண்டு, தமிழ்நாடு அரசும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

12:30 PM (IST) Oct 03

பட்டப்பகலில் பேருந்துக்காக காத்திருந்த 12ம் வகுப்பு மாணவன் குத்திக்கொலை... நடந்தது என்ன?

கடலூர் அருகே 12ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

11:36 AM (IST) Oct 03

நியூஸ் க்ளிக் ரெய்டு: பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா கவலை!

நியூஸ் க்ளிக் செய்தி நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்டு வரும் சோதனைக்கு பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா கவலை தெரிவித்துள்ளது

11:15 AM (IST) Oct 03

ஸ்ரீதேவியின் மரணம் குறித்து முதன்முறையாக மனம் திறந்த போனி கபூர்

ஸ்ரீதேவி மரணம் குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்த போனி கபூர், தற்போது முதன்முறையாக அதுபற்றி பேசி இருக்கிறார்.

10:37 AM (IST) Oct 03

திருப்பத்தூரில் ரூ.58,000 வரை சம்பளத்தில் அரசு வேலை!

திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்

10:12 AM (IST) Oct 03

பிக்பாஸ் 7 போட்டியாளர்களின் சம்பள விவரம் இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களின் சம்பள விவரம் லீக் ஆகி உள்ளது.

10:08 AM (IST) Oct 03

Today Gold Rate in Chennai: இன்ப அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை! நகையை அள்ளிக்கிட்டு போக இதுதான் சரியான டைம்

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து  ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

10:01 AM (IST) Oct 03

தெலங்கானா, சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு பிரதமர் மோடி இன்று பயணம்

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு பிரதமர் மோடி இன்று பயணம் மேற்கொள்ளவுள்ளார்

08:55 AM (IST) Oct 03

முதல் வாரமே 2 எலிமினேஷனா... போட்டியாளர்கள் வயிற்றில் புளியை கரைத்த பிக்பாஸ்... இந்த வார நாமினேஷன் லிஸ்ட் இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த வாரத்திற்கான நாமினேஷன் லிஸ்ட்டில் சிக்கிய போட்டியாளர்கள் பற்றி பார்க்கலாம்.

08:51 AM (IST) Oct 03

இப்போ வெட்ட வெளிச்சம் ஆச்சு.. பீகார் மாநில அரசைப் போல தமிழ்நாடு அரசும் இதை செய்யணும்.. திமிரும் திருமா.!

இந்து என்கிற பெயரில் பாஜக - ஆர்.எஸ்.எஸ் நடத்தும் அரசியல் உயர் சாதியினரின் நலனுக்கானது தான் என்பது இப்போது வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது என திருமாவளவன் கூறியுள்ளார். 

07:37 AM (IST) Oct 03

பாஜக - அதிமுக கூட்டணி முறிவு.! இது என்னுடைய முடிவு அல்ல.! எடப்பாடி பழனிசாமி சொன்ன அதிர்ச்சி தகவல்!

தேர்தல் வந்தால் அழகாக பேசி ஏமாற்றும் அனைத்து தந்திரங்களையும் திமுகவினர் முன்னெடுப்பர். தேர்தல் வரும்போது கவர்ச்சிகரமான அறிவிப்புகளை திமுகவினர் வெளியிடுவார்கள். மக்களை பேசி மயக்கி, ஏமாற்றி ஆட்சிக்கு வந்ததுதான் திமுக ஆட்சி. திமுகவிற்கு வாக்களித்துவிட்டு தமிழக  மக்கள் வேதனையில் உள்ளனர். அனைத்து குடும்பத்தலைவிகளுக்கும் உரிமைத்தொகை என அறிவித்து விட்டு தற்போது தகுதியானவர்களுக்கு மட்டுமே என அறிவித்துள்ளனர் என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

07:14 AM (IST) Oct 03

சென்னையில் 500வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னையில் 500வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் - ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

07:14 AM (IST) Oct 03

Power Shutdown in Chennai : சென்னை மக்களே அலெர்ட்! இன்று 5 மணிநேரம் மின்தடை! எங்கெல்லாம் தெரியுமா?

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

07:13 AM (IST) Oct 03

பிதாமகன், கஜேந்திரா உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார்! திரையுலகினர் அஞ்சலி..!

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்த பிதாமகன், கஜேந்திரா, லவ்லி உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர் வி.ஏ.துரை(69) நேற்று இரவு காலமானார். 


More Trending News