MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • முதல் வாரமே 2 எலிமினேஷனா... போட்டியாளர்கள் வயிற்றில் புளியை கரைத்த பிக்பாஸ்... இந்த வார நாமினேஷன் லிஸ்ட் இதோ

முதல் வாரமே 2 எலிமினேஷனா... போட்டியாளர்கள் வயிற்றில் புளியை கரைத்த பிக்பாஸ்... இந்த வார நாமினேஷன் லிஸ்ட் இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த வாரத்திற்கான நாமினேஷன் லிஸ்ட்டில் சிக்கிய போட்டியாளர்கள் பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Oct 03 2023, 08:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Bigg Boss Tamil season 7

Bigg Boss Tamil season 7

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ந் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்த சீசனில் 9 ஆண் போட்டியாளர்கள், 9 பெண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 பேர் களமிறக்கப்பட்டு உள்ளனர். வழக்கமாக முதல் வாரத்தில் எந்த வித சண்டையும் இல்லாமல் கலகலப்பாக சென்றுவிடும். ஆனால் இந்த சீசனில் போட்டியாளர்களுக்கு இடையே சண்டையை மூட்டிவிட பிக்பாஸ் கையில் எடுத்துள்ள ஆயுதம் தான் 2 வீடு கான்செப்ட்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Bigg Boss Tamil season 7 contestants

Bigg Boss Tamil season 7 contestants

பிக்பாஸ், சுமால் பாஸ் என இரண்டு வீடுகளை கொண்டுள்ள இந்த சீசனில், நேற்று கேப்டன் விஜய் வர்மாவை கவராத 6 போட்டியாளர்கள் என ரவீனா, நிக்சன், பவா செல்லதுரை, அனன்யா, ஐஷூ, வினுஷா ஆகியோர் சுமால் பாஸ் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் 6 பேர் தான் பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவருக்கு தேவையான உணவுகளை சமைத்து தர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி அவர்கள் டாஸ்க்குகளிலும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
Bigg Boss Tamil season 7 Nomination

Bigg Boss Tamil season 7 Nomination

இப்படி முதல்நாளே அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்த பிக்பாஸ், போட்டியாளர்களுக்கு கொடுத்த மற்றொரு ஷாக்கிங் ஆன அறிவிப்பு தான் 2 நாமினேஷன். இந்த முறை சுமால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களையும், பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் சுமால் பாஸ் வீட்டில் இருப்பவர்களையும் நாமினேட் செய்தனர். இதனால் இந்த வாரம் 2 எலிமினேஷன் இருக்குமா என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

44
contestants in Small Boss house

contestants in Small Boss house

அதன்படி பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள், சுமால் பாஸ் வீட்டில் இருக்கும் ஐஷூ, பவா செல்லதுரை, ரவீனா, அனன்யா ராவ் ஆகிய நான்கு பேரை நாமினேட் செய்துள்ளனர். அதேபோல் சுமால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் யுகேந்திரன், பிரதீப் ஆண்டனி மற்றும் வனிதா மகள் ஜோவிகா ஆகிய 3 பேரை நாமினேட் செய்துள்ளனர். இவர்கள் 7 பேரில் இருந்து இந்த வாரம் எலிமினேட் ஆகப்போவது யார் என்பது இந்த வார இறுதிவரை பதிவாகும் வாக்குகள் அடிப்படையில் தெரியவரும்.

இதையும் படியுங்கள்... Small Boss வீட்டுக்கு அனுப்பப்பட்ட 6 போட்டியாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! வெளியான பரபரப்பு ப்ரோமோ!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிக் பாஸ் (தமிழ்)
ரவீணா தாஹா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved