Asianet News TamilAsianet News Tamil

Small Boss வீட்டுக்கு அனுப்பப்பட்ட 6 போட்டியாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! வெளியான பரபரப்பு ப்ரோமோ!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி, நேற்று தொடங்கிய நிலையில் இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகி ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பப்பட்ட 6 போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
 

bigg boss season 7 put new Rules in small house 6 contestant latest promo mma
Author
First Published Oct 2, 2023, 1:02 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 6 சீசனை விட, இந்த முறை சற்று வித்தியாசமாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. இரண்டு பிக்பாஸ் வீடு, ஒரு சமையலறை, ஒரு வாசல், 120 கேமராக்கள், என பரபரப்பாக துவங்கியுள்ளது. இதுவரை பிக்பாஸ் வீட்டிற்குள் 18 போட்டியாளர்கள் நுழைந்துள்ள நிலையில், வயல்காடு மூலம் இரண்டு போட்டியாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் முதல் புரோமோ இன்று காலை வெளியானது. அதில் முதல் நாளே, கேப்டன் விஜய் வர்மாவை மிகவும் குறைவாக கவர்ந்த ஆறு போட்டியாளரான வினுஷா, நிக்சன், பாவா செல்லதுரை, அனன்யா,  ஐஷு, ரவீனா தாஹா ஆகியோர் இரண்டாவது வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். 6 போட்டியாளர்களும், பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததுமே, பிக் பாஸ் இரண்டாவது வீட்டிற்குள் நீங்கள் இருக்கும் வரை உங்களிடம் நான் பேச மாட்டேன் என்றும், நீங்கள் யாரும் இந்த வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்கிற நிபந்தனையையும் விதித்தார்.

பிக்பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கும் இவங்க ரெண்டுபேரும் லவ்வர்ஸா? இது தெரியாம போச்சே.. வைரலாகும் போட்டோஸ்!

bigg boss season 7 put new Rules in small house 6 contestant latest promo mma

இதைத்தொடர்ந்து சற்று முன்னர் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் இரண்டாவது வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள 6 போட்டியாளர்களுக்கான புதிய நிபந்தனைகள் பற்றி, சரவணன் விக்ரம் படிக்கிறார். அந்த வகையில், இரண்டாவது வீடு (ஸ்மால் பாஸ்) வீட்டுக்கு கேப்டனால் தேர்வு செய்யப்படும் ஆறு பேர் ஒவ்வொரு வாரமும் அனுப்பப்படுவார்கள். 

bigg boss season 7 put new Rules in small house 6 contestant latest promo mma

Biggboss 7: முதல் நாளே பிக்பாஸ் கொடுத்த தண்டனை! இரண்டாவது வீட்டுக்கு போன 6 போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா?

அந்த 6 போட்டியாளர்களும் கடைப்பிடித்தே ஆக வேண்டிய விதிமுறைகள், என்னவென்றால்... "ஸ்மால் பாஸ் ஹவுஸ், ஹவுஸ் மேட்ஸ் பிக் பாஸ் வீட்டிற்கு செல்லக்கூடாது. அவர்கள் எந்த ஒரு டாஸ்க்கிலும் பங்கு பெறக் கூடாது. ஷாப்பிங் செல்லக்கூடாது. மூன்று வேலைக்கான மெனுவை பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ் தான் முடிவு செய்வார்கள், அந்த மெனுவை தான் சமைக்க வேண்டும். பிக்பாஸ் வீட்டின் ஹவுஸ் கிளீனிங், பாத்ரூம் கிளீனிங், வேலைகளை ஸ்மால் ஹவுஸ் போட்டியாளர்கள் தான் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கண்டிப்பாக பிக்பாஸ் வீட்டிற்குள் பிரச்சனை எழும் என தெரிகிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios