Biggboss 7: முதல் நாளே பிக்பாஸ் கொடுத்த தண்டனை! இரண்டாவது வீட்டுக்கு போன 6 போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா?
பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று கோலாகலகலமாக, போட்டியாளர்களின் வெரைட்டியான ஃபர்பாமென்சுடன் கலகலப்பாக துவங்கியது. இதில் முதல் நாளே தண்டனையோடு, இரண்டாவது வீட்டுக்கு சென்ற அந்த 6 போட்டியாளர்கள் பற்றிய புரோமோ வெளியாகியுள்ளது.
Kamalhaasan hosting Biggboss
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி அக்டோபர் 1-ஆம் தேதி, அதாவது நேற்றைய தினம், துவங்கியது. எனவே இனி, சர்ச்சைகளுக்கும், ட்ரோல்களுக்கும் சமூக வலைத்தளத்தில் பஞ்சமிருக்காது என்றே தெரிகிறது.
First Day Biggboss House
முதல் நாளில் அனைத்து போட்டியாளர்களும், மிக பிரமாண்டமாகவும், கலர் ஃபுல்லாகவும் வடிவமைக்கப்பட்டுள்ள, முதல் வீட்டிற்குள் சென்றனர். எனவே இரண்டாவது வீட்டில் யாரும் தங்க வைக்க மாட்டார்களா? என்கிற சந்தேகமும் ரசிகர்கள் மனதில் எழுந்தது.
Vijay Varma is the First Captain
இதை தொடர்ந்து, இந்த வார... தலைவர் போட்டியில் விஜய் வர்மா வெற்றி பெற்றுள்ளார் என தெரிகிறது. இவரை குறைவாக கவர்ந்த, போட்டியாளர்கள் 6 பேரை... தான் தற்போது பிக்பாஸ் இரண்டாவது வீட்டுக்கு அனுப்பியுள்ளார்.
Second House Contestant:
அதன்படி, தற்போது இரண்டாவது வீட்டுக்கு, ஐஷு, நிக்சின், பாவா செல்லத்துரை, அனன்யா, வினுஷா, ரவீனா ஆகியோர் இரண்டாவது வீட்டுக்கு செல்லலாம் என பிக்பாஸ் கூறுகிறார்.
Punishment:
இனி முதல் வீட்டுக்கு வரும் போது தான் நான் உங்களிடம் பேசுவேன் என கூறுவதோடு, அதே போல் இரண்டாவது வீட்டில் இருக்கும் 6 பேரும் எந்த காரணத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரண்டாவது, தண்டனை கொடுப்பதற்கான இடம் என்பது தெரியவந்துள்ளது.