பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்பொழுது கோலாகலமாக துவங்கி உள்ளது. உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் ஒருவர் பின் ஒருவராக அனைத்து போட்டியாளர்களையும் பிக் பாஸ் வீட்டிற்குள் வரவேற்று வருகிறார்.

ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்குள் பிரபல நடிகர் கூல் சுரேஷ், நடிகைகள் பூர்ணிமா ரவி மற்றும் ரவீனா அவர்களைத் தொடர்ந்து நடிகர் பிரதீப் ஆண்டனி ஆகியோர் உள்ளே நுழைந்துள்ள நிலையில், அடுத்தபடியாக சின்னத்திரை நாயகி வினுஷா தேவி தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

யார் இந்த வினுஷா தேவி?

சென்னை மாநகரில் கடந்த 1998 ஆம் ஆண்டு பிறந்த வினுஷா தேவி தனது பட்டப் படிப்பை முடித்துவிட்டு, உடனே மாடலிங் துறையில் களமிறங்கினார். மாடலிங் துறையில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற வெறியோடு களமிறங்கிய வினுஷா தேவிக்கு கிடைத்த முதல் வாய்ப்பு தான் என் N4 என்ற திரைப்படத்தில் நடிக்கக் கூடிய வாய்ப்பு. 

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ஆராத்தி.. இனி Entertainmentக்கு பஞ்சமே இல்ல - யார் இந்த பூர்ணிமா ரவி?

கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான அந்த திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார், அதனை தொடர்ந்து உடனடியாக அவருக்கு சின்னத்திரை சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவந்த பாரதிகண்ணம்மா என்ற நிகழ்ச்சியில் ஏற்கனவே நடிகை ரோஷினி ஹரிப்ரியன் நடித்து வந்த கதாபாத்திரத்தில் இவர் நடிக்க துவங்கினார். 

தற்பொழுது பாரதி கண்ணம்மா சீரியலின் இரண்டாம் பாகத்திலும் அனுஷ் தினுஷா தேவி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ள வினுஷாவிற்கும் ரசிகர்கள் பலர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம் முதல் மௌனராகம் வரை.. பிக் பாஸ் வீட்டுக்கு செல்லும் குக் வித் கோமாளி.. யார் இந்த ரவீனா தாஹா?