கம்மி சம்பளம் வாங்கும் ஜோவிகா முதல் அதிக சம்பளம் வாங்கும் பவா வரை பிக்பாஸ் 7 போட்டியாளர்களின் சம்பள விவரம் இதோ
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களின் சம்பள விவரம் லீக் ஆகி உள்ளது.
Bigg Boss Tamil season 7 contestants salary
பல்வேறு புதுமைகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கோலாகலமாக தொடங்கி உள்ளது. இந்த சீசனில் விசித்ரா, யுகேந்திரன், பிரதீப் ஆண்டனி, விஜய் வர்மா, அனன்யா ராவ், வினுஷா, ரவீனா, பவா செல்லதுரை, நிக்சன், ஐஷூ, சரவண விக்ரம், விஷ்ணு விஜய், கூல் சுரேஷ், மணி சந்திரா, ஜோவிகா, மாயா, பூர்ணிமா, அக்ஷயா உதயகுமார் என மொத்தம் 18 போட்டியாளர்கள் களமிறங்கி உள்ளனர். அவர்களின் சம்பள விவரம் பற்றி பார்க்கலாம்.
ஜோவிகா, அக்ஷயா, மாயா
பிக்பாஸ் 7-வது சீசனில் கம்மியாக சம்பளம் வாங்கும் போட்டியாளர்களில் வனிதாவின் மகள் ஜோவிகாவும் ஒருவர். இவருக்கு ஒரு எபிசோடுக்கு 13 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுகிறதாம். அதேபோல் நடிகை அக்ஷயா உதயகுமாருக்கு ஒரு எபிசோடுக்கு ரூ.15 ஆயிரமும், நடிகை மாயா கிருஷ்ணனுக்கு ஒரு எபிசோடுக்கு ரூ.18 ஆயிரமும் சம்பளமாக வழங்கப்படுகிறது.
ஐஷூ, பூர்ணிமா, அனன்யா
பிக்பாஸ் 7-வது சீசனில் புது முகங்களாக களமிறங்கி உள்ள ஐஷூ மற்றும் யூடியூப் மூலம் பிரபலமான நடிகை பூர்ணிமா ஆகியோருக்கு ஒரு எபிசோடுக்கு ரூ.15 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுகிறதாம். அதேபோல் மற்றொரு புதுமுகமான அனன்யா ராவுக்கு ரூ.12 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
சரவண விக்ரம், பவா செல்லதுரை, விஜய் வர்மா
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமான நடிகர் சரவண விக்ரமுக்கு ஒரு எபிசோடுக்கு ரூ.18 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. அதேபோல் பிரபல எழுத்தாளரான பவா செல்லதுரைக்கு ரூ.28 ஆயிரமும், பிக்பாஸ் 7 நிகழ்ச்சியின் முதல் கேப்டனான விஜய் வர்மாவுக்கு ரூ.15 ஆயிரமும் சம்பளமாக வழங்கப்படுகிறதாம்.
கூல் சுரேஷ், யுகேந்திரன், நிக்சன்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுத்துள்ள நடிகர் கூல் சுரேஷுக்கு ஒரு எபிசோடுக்கு ரூ.18 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுகிறதாம். அதேபோல் மலேசியா வாசுதேவனின் மகனான யுகேந்திரனுக்கு ரூ.27 ஆயிரமும், ராப் பாடகரான நிக்சனுக்கு ரூ.13 ஆயிரமும் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறதாம்.
பிரதீப் ஆண்டனி, மணி சந்திரா, விஷ்ணு
கவினின் நண்பனும் நடிகருமான பிரதீப் ஆண்டனிக்கு ஒரு எபிசோடுக்கு ரூ.20 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுகிறது. அதேபோல் நடன கலைஞர் மணிச்சந்திராவுக்கு ரூ.18 ஆயிரமும், சீரியல் நடிகர் விஷ்ணுவுக்கு ஒரு எபிசோடுக்கு ரூ.25 ஆயிரமும் சம்பளமாக வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசித்ரா, ரவீனா, வினுஷா
பிக்பாஸ் சீசன் 7ல் அதிக சம்பளம் வாங்கும் மற்றுமொரு போட்டியாளர் என்றால் அது விசித்ரா தான். அவருக்கு ஒரு எபிசோடுக்கு ரூ.27 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுகிறதாம். அதேபோல் நடிகை ரவீனாவுக்கு ரூ. 18 ஆயிரமும் சீரியல் நடிகை வினுஷா தேவிக்கு ரூ.20 ஆயிரமும் சம்பளமாக வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... ரூல்ஸை மீறிய விசித்ரா மற்றும் யுகேந்திரன்... அதிரடியாக வீட்டை விட்டு வெளியேற்றிய பிக்பாஸ் - ஷாக்கிங் புரோமோ