18 ஜிபி ரேம்.. பாஸ்ட் சார்ஜிங் வசதி வேற இருக்கு.. OnePlus 11R 5G விரைவில் அறிமுகம் - முழு விபரம் இதோ !!
ஒன் பிளஸ் (OnePlus 11R 5G) சோலார் ரெட் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் பிற முக்கிய அம்சங்கள் பற்றி பார்க்கலாம்.
OnePlus 11R 5G
ஒன் பிளஸ் (OnePlus) ஆனது OnePlus 11R 5G சோலார் ரெட் இந்தியாவை 18 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ரோம் உடன் வெளியிட்டுள்ளது. 16ஜிபி பதிப்பின் 44-ஆப்ஸ் வரம்பை மிஞ்சும் வகையில், ஒரே நேரத்தில் 50 ஆப்ஸ் வரை சீராக இயங்கும் என்று கூறப்படுகிறது.
OnePlus 11R 5G Launch
கேமர்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இதற்கு மிக முக்கிய காரணம் ரேம் வசதிதான். ஒரு வினாடிக்கு 59.46 பிரேம்களின் சராசரி பிரேம் வீதத்தை தொடர்ந்து பராமரிக்கிறது.
OnePlus 11R 5G Solar Red
ஒன்பிளஸின் சின்னமான 'ரெட்' நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஹேண்ட் ஃபீல் உடன் வருகிறது. 100W SUPERVOOC Endurance Edition சார்ஜிங் சாதனம் வெறும் 25 நிமிடங்களில் 1% முதல் 100% வரை அடைகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/
OnePlus
பேட்டரி ஹெல்த் எஞ்சினுடன் கூடிய 5000mAh பெரிய பேட்டரி (BHE) ) வரவிருக்கும் ஆண்டுகளில் நாள் முழுவதும் பேட்டரி மற்றும் 4+5 ஆண்டுகள் ஆண்ட்ராய்டு ஆதரவு பெறுகிறது.
OnePlus Latest Mobile
OnePlus 11R 5G சோலார் ரெட் விலை மற்றும் விற்பனை தேதி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. அக்டோபர் 8 ஆம் தேதி தொடங்கும் Amazon Great Indian Festival சேல் 2023 இன் போது ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனைக்கு வரும்.