Asianet News TamilAsianet News Tamil

பாஜக - அதிமுக கூட்டணி முறிவு.! இது என்னுடைய முடிவு அல்ல.! எடப்பாடி பழனிசாமி சொன்ன அதிர்ச்சி தகவல்!

தேர்தல் வந்தால் அழகாக பேசி ஏமாற்றும் அனைத்து தந்திரங்களையும் திமுகவினர் முன்னெடுப்பர். தேர்தல் வரும்போது கவர்ச்சிகரமான அறிவிப்புகளை திமுகவினர் வெளியிடுவார்கள். மக்களை பேசி மயக்கி, ஏமாற்றி ஆட்சிக்கு வந்ததுதான் திமுக ஆட்சி. திமுகவிற்கு வாக்களித்துவிட்டு தமிழக  மக்கள் வேதனையில் உள்ளனர். 

BJP AIADMK alliance break.! This is not my decision. Edappadi Palanisamy tvk
Author
First Published Oct 3, 2023, 7:31 AM IST

கண்ணின் இமை காப்பது போன்று, சிறுபான்மை மக்களை காப்பதில் அதிமுக முதன்மையாக திகழ்கிறது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

சேலம் மாநகர அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்;- தேனீ போல் சுறுசுறுப்பாக செயல்பட்டு அதிமுகவுக்கு கிடைக்கக் கூடிய வாக்குகளை சிந்தாமல், சிதறாமல் கிடைக்க செய்ய வேண்டும். பூத் கமிட்டி உறுப்பினர்கள் இந்த பணிகளை சிறப்பாக செயல்படுத்தினால் நமது வேட்பாளர்கள் எளிதாக வெற்றி பெற முடியும். கட்டடத்திற்கு அஸ்திவாரம் போன்றவர்கள் தான் பூத் கமிட்டி உறுப்பினர்கள். தேர்தல் நேரத்தில் வாக்குச்சாவடிகளில் கள்ள ஓட்டு போடுவதை தடுப்பதே முக்கியமான பணியாகும். 

இதையும் படிங்க;- நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி.? எடப்பாடி அணியுடன் கூட்டணி அமையுமா.? டிடிவி தினகரன் அதிரடி பதில்

BJP AIADMK alliance break.! This is not my decision. Edappadi Palanisamy tvk

இஸ்லாமியர்கள் நினைத்தபடியே அதிமுக நடந்து கொண்டது. கண்ணின் இமை காப்பது போன்று, சிறுபான்மை மக்களை காப்பதில் அதிமுக முதன்மையாக திகழ்கிறது. பல பேர் வாக்குகளுக்காக எதை, எதையோ பேசுவார்கள் நாங்கள் அப்படி கிடையாது. நீங்கள் தைரியமாக இதை சிறுபான்மையின மக்களிடம் எடுத்து சொல்லி வாக்குசேகரிக்க வேண்டும் என்றார். 

தேர்தலின் போது திமுக 520 வாக்குறுதிகளை வெளியிட்டதில் 95 சதவீதம் நிறைவேற்றிவிட்டதாக பச்சை பொய் கூறி வருகிறது. திமுக அரசு ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் சேலம் மாநகரில் ஒரு திட்டத்தையும் கொண்டுவரவில்லை. திமுக ஆட்சியில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் கஞ்சா விற்பனை, கொலை, கொள்ளை அரங்கேறி வருகிறது. தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. 7.5% இடஒதுக்கீடு மூலம் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவராகியுள்ளனர். 

BJP AIADMK alliance break.! This is not my decision. Edappadi Palanisamy tvk

தேர்தல் வந்தால் அழகாக பேசி ஏமாற்றும் அனைத்து தந்திரங்களையும் திமுகவினர் முன்னெடுப்பர். தேர்தல் வரும்போது கவர்ச்சிகரமான அறிவிப்புகளை திமுகவினர் வெளியிடுவார்கள். மக்களை பேசி மயக்கி, ஏமாற்றி ஆட்சிக்கு வந்ததுதான் திமுக ஆட்சி. திமுகவிற்கு வாக்களித்துவிட்டு தமிழக  மக்கள் வேதனையில் உள்ளனர். அனைத்து குடும்பத்தலைவிகளுக்கும் உரிமைத்தொகை என அறிவித்து விட்டு தற்போது தகுதியானவர்களுக்கு மட்டுமே என அறிவித்துள்ளனர். 

இதையும் படிங்க;- நம்பிக்கை துரோகத்தின் உருவம் தான் பண்ருட்டியார்! எங்களை பற்றி பேச H.ராஜாவுக்கு என்ன தகுதி இருக்கு! KP.முனுசாமி

BJP AIADMK alliance break.! This is not my decision. Edappadi Palanisamy tvk

தமிழ்நாட்டில் மக்களின் உரிமைகளை காக்கவே அதிமுக போராடுகிறது. எங்களை பொருத்தவரையில் மக்கள் தான் எஜமானர்கள். தமிழ்நாட்டு மக்களின் எண்ணங்கள் நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலித்து அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் பிரம்மாண்ட வெற்றி பெறும். பாஜகவுடான கூட்டணியில் இருந்து விலகுவதை பொதுச்செயலாளர் என்ற முறையில் நான் மட்டும் எடுத்த முடிவு கிடையாது. ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் விதமாக ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் அனைவரும் கூடி எடுத்த முடிவு என்றார். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

BJP AIADMK alliance break.! This is not my decision. Edappadi Palanisamy tvk

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக அறிவித்தாலும் இன்னும்  எடப்பாடி பழனிசாமி வாய் திறக்கவில்லை என்று அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர். ஒரு கட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதுதான் இறுதி முடிவு. ஊடகங்களில் பேசும் போது யார் பிரதமர் என்று முன்னிறுத்தி பேசுகிறார்கள். ஒடிசா, மேற்கு வங்கம், கேரளா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் யார் பிரதமர் என்று முன்னிறுத்தியா நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்டார்கள். தங்களுடைய மாநிலங்களை காப்பாற்ற வேண்டும் என்று அவர்கள் செயல்படுகிறார்கள். இதுபோன்று தமிழ்நாட்டுக்காக நாங்கள் பாடுபடுவோம் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios