நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி.? எடப்பாடி அணியுடன் கூட்டணி அமையுமா.? டிடிவி தினகரன் அதிரடி பதில்

தமிழகத்தில் தீண்டாமை இல்லை, சாதி சமய வேறுபாடு இல்லை, மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னுதாரணமாக உள்ளதாக தெரிவித்த டிடிவி தினகரன், இங்கு அங்கொன்றும் இங்கொன்றும் தனிப்பட்ட நபர்களின் செயல்பாடுகளை வைத்து ஆளுநர் பேசுவது தவறு என கூறியுள்ளார். 

TTV Dhinakaran has said that he will not form an alliance with the Edappadi team KAK

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது ஏன்.?

தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களை அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் சந்தித்தார், அப்போது அவரிடம், அண்ணாமலை முதல்வர் என்பதால் அதிமுக - பாஜக கூட்டணி  முறிவு ஏற்பட்டதாக கூறுப்படுவது தொடர்பான  கேள்விக்கு பதில் அளித்த அவர்,  யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது, ஊடகங்களில் பார்க்கின்ற தகவல்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது , தாங்கள் யாருடன் கூட்டணி என்பது தொடர்பாக தேர்தல் நேரத்தில் செல்வோம். ஓபிஎஸ் எனது பழைய நண்பர் அவர் ஏதோ கோபத்தில் செய்தது. எவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டாலும் நண்பர் என்ற முறையில் மீண்டும் இணைவது என்பது நாட்டில் நடப்பது தான் என கூறினார். 

TTV Dhinakaran has said that he will not form an alliance with the Edappadi team KAK

எடப்பாடி அணியுடன் கூட்டணியா.?

ஓபிஎஸ் உடன் இணைந்து செயல்படுவீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், ஓபிஎஸ் தனித்து முடிவு எடுப்பார். ஆனால் நாங்கள் இருவரும் இணைந்து செயல்படுவோம் என மட்டும் தான் கூறியுள்ளோம்,  அவருடைய செயல்பாடுகளில் எதுவும் சொல்ல இயலாது. அமமுக எடப்பாடி பழனிச்சாமியுடன் கூட்டணி செல்லக்கூடாது என 90 சதவீத அமமுகவினர் விரும்புகின்றனர்.  ஓபிஎஸ், இபிஎஸ் உடன் கூட்டணி சேர்ந்தாலும் நாங்கள் சேர மாட்டோம் தனியாகவே போட்டியிடுவோம் என தெரிவித்தார். 

பட்டியிலின பெண்ணுக்கு நீதி கிடைக்கவில்லை இது தான் சமூக நீதியா என ஆளுநர் ரவி கூறுவது தொடர்பான  குறித்த கேள்விக்கு? பதில் அளித்த அவர், தமிழகத்தில் ஆண்.பெண் சமம் என்ற சமூகநீதி பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா செயல்களால் தான் தமிழகம் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகநீதி உள்ள சிறந்த மாநிலமாக விளங்கி வருகிறது. தமிழகத்தில் தீண்டாமை இல்லை, சாதி சமய வேறுபாடு இல்லை, கல்வி, தொழிலில் பிறப்பால் எந்த பிரிவினையும் இல்லை.  அங்கொன்றும் இங்கொன்றும் தனிநபர்களின் செயல்பாடுகளை வைத்து ஆளுநர் பேசுவது தவறு.

TTV Dhinakaran has said that he will not form an alliance with the Edappadi team KAK

எப்போது தேர்தல் வந்தாலும் ஆட்சி மாறும்

திமுக அரசின் செயல்பாடுகள் தொடர்பான கேள்விக்கு, தமிழக மக்கள் திமுக ஆட்சியின் மீது கடும் அதிருப்தியில் உள்ளார்கள்,  எடப்பாடி பழனிச்சாமி செய்த ஊழல்கள் தவறுகளால் திமுகவிற்கு வாக்களித்தார்கள் இன்று திமுக ஏன் வாக்களித்தோம் என மக்கள் உணர்ந்து இருக்கும் காரணத்தினால் திமுகவுக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு மாற்று சக்தியாக அமமுக வரும் என தமிழக மக்கள் உறுதியாக ஆதரிப்பார்கள் அதனை பார்க்கத்தான் போகிறீர்கள் எனவே  எப்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் இந்த ஆட்சி முடிவுக்கு வந்துவிடும் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.  

இதையும் படியுங்கள்

பிடி கொடுக்காத எடப்பாடி..! அவசரமாக டெல்லி செல்லும் அண்ணாமலை- அமித்ஷாவுடன் இன்று முக்கிய ஆலோசனை

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios