Asianet News TamilAsianet News Tamil

திருப்பத்தூரில் ரூ.58,000 வரை சம்பளத்தில் அரசு வேலை!

திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்

How to apply Rural Development and Panchayat Raj Department job notification in Tirupathur District smp
Author
First Published Oct 3, 2023, 10:35 AM IST | Last Updated Oct 3, 2023, 10:35 AM IST

திருப்பத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஜீப் டிரைவர், ரெக்கார்டு கிளார்க், இரவு வாட்ச்மேன் ஆகிய பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலிப்பணியிடங்கள்


அலுவலக உதவியாளர் - 11
ஜீப் டிரைவர் - 09
பதிவறை எழுத்தர்/ரெக்கார்டு கிளார்க் - 02
இரவு காவலர் - 02

சம்பள விவரம்


அலுவலக உதவியாளர் - ரூ.15,700 - ரூ.58,100
ஜீப் டிரைவர் - ரூ.19,500 - ரூ.71,900
பதிவறை எழுத்தர்/ரெக்கார்டு கிளார்க் - ரூ.15,900 - ரூ.58,500
இரவு காவலர் - ரூ.15,700 - ரூ.58,100

கல்வித்தகுதி


அலுவலக உதவியாளர் - 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
ஜீப் டிரைவர் - 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
பதிவறை எழுத்தர்/ரெக்கார்டு கிளார்க் - 10ஆம் வகுப்பு நிறைவு செய்திருக்க வேண்டும்
இரவு காவலர் - எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்


வயது வரம்பு


அனைத்து பணியிடங்களுக்கும் 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு விதிகளின் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்


தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://tirupathur.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளத்துக்கு சென்று, அதில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, தகுதிச் சான்றுகளுடன் இணைத்து பதிவஞ்சல் மூலமாக மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். நேரில் சென்று விண்ணப்பிக்க முடியாது. விண்ணப்பிக்க கடைசி நாள் 31.10.2023 ஆகும்.

சென்னை NITTTR நிறுவனத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை; ரூ.93 ஆயிரம் வரை சம்பளம்!

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியாளரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), ஊரக வளர்ச்சி அலகு, மூன்றாவது தளம் (E பிளாக்), மாவட்ட ஆட்சியரகம், திருப்பத்தூர்-635601 என்ற முகவரிக்கு விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

காலிப்பணியிடங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s37f6ffaa6bb0b408017b62254211691b5/uploads/2023/09/2023093062.pdf இதனை க்ளிக் செய்யவும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios