சென்னை NITTTR நிறுவனத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை; ரூ.93 ஆயிரம் வரை சம்பளம்!

மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று பிரிவுகளில் காலிப் பணியிடங்கள் உள்ளன. ரூ.19 ஆயிரம் முதல் ரூ.93 ஆயிரம் வரை மாதச் சம்பளம் வழங்கப்படும்.

NITTTR Chennai Recruitment: Group C Posts Reserved for Persons with Disabilities; Technical Assistant, Junior Secretariat Assistant, Hindi Typist sgb

சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தக் காலிப் பணியிடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை தரமணியில் உள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (National Institute Of Technical Teachers Training And Research) மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.

என்ஐடிடிடிஆர் நிறுவனத்தில் டெக்னீக்கல் அசிஸ்டெண்ட்- குருப் II (ஜூனியர் எலக்ட்ரானிக்ஸ் டெக்னீசியன்), டெக்னீக்கல் அசிஸ்டெண்ட்- குருப் II (கிராபிங் அசிஸ்டெண்ட்) மற்றும் ஜூனியர் செயலக உதவியாளர் (இந்தி டைப்பிஸ்ட்) ஆகிய மூன்று பிரிவுகளில் தலா ஒரு இடம் வீதம் 3 காலிப் பணியிடங்கள் உள்ளன.

சொந்த மகள்களையே சீரழித்த தந்தை; கொன்று விடுவதாக மிரட்டி 4 வருடமாக செக்ஸ் டார்ச்சர்!

NITTTR Chennai

டெக்னீக்கல் அசிஸ்டெண்ட்- குருப் II பணி கண்பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும், டெக்னீக்கல் அசிஸ்டெண்ட்- குருப் II (கிராபிங் அசிஸ்டெண்ட்) பணி லோகோ மோட்டார் அல்லது ஆர்த்தோ பிரச்சினை இருப்பவர்களுக்கும், ஜூனியர் செயலக உதவியாளர் (இந்தி டைப்பிஸ்ட்) பணி செவித்திறன் குறைபாடு கொண்டவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணியிடங்களில் ரூ.19 ஆயிரம் முதல் ரூ.93 ஆயிரம் வரை மாதச் சம்பளம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. வயது வரம்பு தளர்வு., கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களை விரிவாக அறிந்துகொள்ள  அதிகாரபூர்வ அறிவிப்பைப் பார்க்கலாம். இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது.

மருத்துவ நோபல் பரிசு 2023: கொரோனா தடுப்பூசிக்கு வழிவகுத்த இரு விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு

https://www.nitttrc.ac.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை PDF மற்றும் Word கோப்புகளாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை ஆவணங்களுடன் இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு அக்டோபர் மாதம் 25ம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பவேண்டும்.

Director,

National Institute of Technical Teachers Training and Research (NITTTR),

Taramani, Chennai - 600 113,

Tamilnadu, India

NITTTR சென்னை நிறுவனத்தில் இந்த வேலைவாய்ப்பு பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பைக் காணவும், விண்ணப்பப் படிவத்தை டவுன்லோட் செய்யவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.

NITTTR Recruitment of Group C (PwD) Posts - Technical Assistant, Junior Secretariat Assistant, Hindi Typist

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios