சொந்த மகள்களையே சீரழித்த தந்தை; கொன்று விடுவதாக மிரட்டி 4 வருடமாக செக்ஸ் டார்ச்சர்!
பள்ளி முடிந்தவுடன் வீட்டுக்குச் செல்ல பயந்து, தாய் வீடு திரும்பும் வரை பூங்காவில் அமர்ந்து இருந்துவிட்டு பின்னர் வீட்டுக்குச் செல்வதாகவும் சகோதரிகள் ஆசிரியரிடம் சொல்லி இருக்கிறார்கள்.
கடந்த நான்கு ஆண்டுகளாக தனது இரண்டு மைனர் மகள்களையும் பாலியல் பலாத்காரம் செய்ததாக 40 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நபர் தன் ஆசைக்கு இணைங்காவிட்டால் அவர்களைக் கொன்றுவிடுவதாக மிரட்டியதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
15 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் அரை மனதுடன் வகுப்புகளுக்குச் சென்றுவருவதைக் கண்ட ஆசிரியர் ஒருவர் மூத்த சகோதரியிடம் பேசி காரணத்தை அறிய முயன்றுள்ளார். அப்போது, அந்தச் சிறுமி தந்தையால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள அவலத்தை அந்த ஆசிரியரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அவர் சிறுமிகளின் தந்தை குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.
கனமழை காரணமாக கன்னியாகுமரியில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
பள்ளி முடிந்ததும் வீட்டுக்குச் சென்றால், வேலைக்குச் சென்றிருக்கும் தாய் வீடு திரும்பும் வரை தந்தையுடன் தனியாக இருக்க வேண்டியிருக்கும். இதனால் பள்ளி முடிந்தவுடன் வீட்டுக்குச் செல்ல பயந்து, தாய் வீடு திரும்பும் வரை பூங்காவில் அமர்ந்து இருந்துவிட்டு பின்னர் வீட்டுக்குச் செல்வதாகவும் சகோதரிகள் ஆசிரியரிடம் சொல்லி இருக்கிறார்கள்.
தங்கள் தந்தை பல நாட்களாக வேலையில்லாமல் இருந்ததாகவும், தாய் மட்டுமே சத்துணவு ஊழியராக வேலை செய்து வருவதாகவும் சிறுமிகள் கூறியதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார். புகாரின் பேரில் குற்றம் சாட்டப்பட்ட நபர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக மசூரி ஏசிபி நரேஷ் குமார் கூறுகிறார்.
மருத்துவத்துக்கான நோபல் பரிசு 2023: கொரோனா தடுப்பூசிக்கு வழிவகுத்த இரு விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு