கனமழை காரணமாக கன்னியாகுமரியில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பெய்துவரும் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்னும் தொடங்கவில்லை. இருப்பினும் மாநிலம் முழுவதும் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. தென்மாவட்டங்களில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்துகொண்டிருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் திங்கட்கிழமை இரவு முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை பொழிந்தது. சில பகுதிகளில் கனமழையும் பெய்திருக்கிறது. இதனால் பல இடங்களில் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. இன்றும் காலை முதல் கோதையார், குழித்துறை, தக்கலை, நாகர்கோயில் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது.
Power Shutdown in Chennai : சென்னை மக்களே அலெர்ட்! இன்று 5 மணிநேரம் மின்தடை! எங்கெல்லாம் தெரியுமா?
இந்நிலையில், தொடர் கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சியிர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார். சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பள்ளி குழந்தைகளின் நலன்கருதி இன்று ஒருநாள், பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது என்று கலெக்டர் ஸ்ரீதர் கூறியுள்ளார். அதே நேரத்தில் கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் வழக்கம் போல செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மோதிரமலை - குற்றியார் இடையே சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. நான்காவது நாளாக, மோதிரமலை, மாங்காமலை, முடவன்பேறு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட ஊரை விட்டு வெளியே செல்லமுடியாத நிலை காணப்படுகிறது.
பாஜக - அதிமுக கூட்டணி முறிவு.! இது என்னுடைய முடிவு அல்ல.! எடப்பாடி பழனிசாமி சொன்ன அதிர்ச்சி தகவல்!